இது தாண்டா பல்டி!!

தெருவில் வாக்கிங் போய்க் கொண்டிருந்த சீத்தாராம் எச்சூரியையும் பிரகாஷ் காரத்தையும் வழியில் மடக்கிய சில குரங்குகள், இவர்களால் தமதுபிழைப்பே நாறிப்போய் விட்டது என்றும், இவர்களின் தொழில் ரகசியத்தை சொல்லிக் கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கின்றன...

குரங்கு ஒன்று : - அய்யா, சிறப்பன முறையில் பல்டியடிப்பது எப்படி? நீங்கெல்லாம் அடிக்கும் பல்டியை பார்த்தால் எங்களுக்கெல்லாம்மார்கெட்டே போயிடும் போலிருக்கே!! உங்கள் தொழில் ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்து காப்பாத்துங்கையா.

ப்ரகாஷ் காரத் :- அது ஒன்னும் அவ்வளவு கஷ்டமான காரியமில்லை. முதலில் இவன் பல்டியடிக்க மாட்டான் என்கிற மாதிரி ஒரு தோற்றத்தைஏற்படுத்தனும். நான் அடிக்கமாட்டேன் அடிக்க மாடேன்னு சொல்லிச் சொல்லி ஒரு பிலிம் போடனும்.. அப்புறம் எல்லோரும் வாயத் தொறந்துட்டுஏமாந்து இருக்கும் போது சட்டுன்னு அடிச்சிடனும்..

குரங்கு இரண்டு :- ஒன்னும் பிரியலீங்களே..!

சீதாராம் எச்சூரி :- அதாவதுப்பா... பல்டியடிக்கறதுக்கு முன்னே எல்லார் பார்வையையும் நம்ம பக்கம் கொண்டாந்துடனும். நெறைய சவடால் அடிக்கனும்.. பெரிய பெரிய மனுஷங்க பேரெல்லாம் சொல்லி உதார் உடனும் - இந்த கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இப்படியாப் பார்த்து சிலபெயர்களை தெரிச்சி வச்சிக்கனும்.. நாங்கெல்லாம் அவர்களோட சீடர்கள்னு சும்மாங்காட்டிக்கு பீலாவுடனும்.. எல்லோரும் நம்பிக்கிட்டு இருக்கும் போதா பார்த்துஒரு அடி! ஒவ்வொத்தனும் அப்பிடியே வாயடச்சிப் போறா மாதிரி செய்துப்பிடனும்.. ஆமா..!

குரங்கு ஒன்று :- சரியா வெளங்கலையே... எதுனா உதாரணத்தோட சொல்லுங்களேன்..

காரத் :- இப்ப பாருங்க.. அணு ஒப்பந்தத்துல மேற்கொண்டு மனசுக்குள்ளே சிந்திச்சாலே நாங்க ஆட்சிய கலைச்சுடுவோம்னு அப்படியே உதார் விட்டோ மா..எங்களை இன்னும் நல்லவன்ன்ன்னு நம்பிட்டு இருக்கற மக்களெல்லாம் நிம்மதியா ஒரு பெருமூச்சு வுட்டாங்களா... அந்தப் பெருமூச்சு தீர்றதுக்குள்ளேசர்வதேச அணு சக்திக் கழகத்துல பேச்சு நடத்த தடையில்லேன்னும் சொல்லி அடிச்சோம் பாரு ஒரு பல்டி! அப்படி இருக்கனும்..

குரங்குகள் ஒரே குரலில் :- இதென்ன சரியான பேச்சுமாத்தா இருக்கு! இந்தப் நாறப்பொழப்பெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.. நாங்க திரும்பகாட்டுக்கே போறம்...

அப்பால மேட்டரு இன்னான்னா.... சிபிஎம் மடத்தோட சாமியாருங்கெல்லாம் வயக்கம் போல நீள நீளமா பிலிம் ஓட்டினு இருந்தாங்களே அணு சக்திஒப்பந்தத்தப் பத்தி... அவங்களோட அமெரிக்க அய்யாமாருகல்லாம் கல்கத்தாவுல வச்சி நேர்ல பார்த்த பின்னே, வயக்கம் போலவே ஓடுன பிலிம் ரோலஅவங்களே அறுத்துப்பிட்டாங்க..

சம்பந்தப்பட்ட செய்திகளின் தொகுப்பு :-

1) http://in.news.yahoo.com/071113/211/6n74g.html

"But on Tuesday, the party said it has allowed the government to discuss
the Indo-US nuclear with the International Atomic Energy Agency (IAEA), which
was a complete reversal of its stand that the deal must not be 'operationalised'
"

2) http://www.indiainfoline.com/news/innernews.asp?storyId=51412&lmn=1

"As expected, the UPA-Left committee on the Indo-US
civilian nuclear agreement allowed the Government to kick off negotiations with
the International Atomic Energy Agency (IAEA) for India-specific safeguards
"

3) http://www.timesnow.tv/NewsDtls.aspx?NewsID=4317

"It appears that the Communists have finally bowed
to the UPA on the Nuclear deal"

4) http://www.dnaindia.com/report.asp?newsid=1133294

"clarified that their decision to allow the UPA
government to approach the IAEA for India-specific safeguard talks was only to
save Prime Minister Manmohan Singh from embarrassment before the international
community."


5) http://www.deccanherald.com/Content/Nov162007/national2007111636099.asp?section=updatenews

"In a dramatic turnaround, the
Left parties on Friday allowed the Manmohan Singh government to initiate talks
with the IAEA on India-specific safeguards agreement for the operationalisation
of the Indo-US Nuclear deal."


என்னோட சொந்த சலிப்பு : ச்சே எல்லா பத்திரிக்கை லூசுகளும் இந்த நாதாரிகளை இன்னும் "கம்யூனிஸ்டுகள்" அப்படின்னு எழுதி நம்ப ரத்தக் கொதிப்ப ஏத்துறானுவப்பா!

6 comments:

said...

போலி கம்யூனிஸ்டுன்னு சொன்னாலும்

கம்யூனிஸ்டு ங்கர வார்த்தை வருதே

பிறகு என்ன சொல்லலாம் .

நாதாறிகள் நல்ல பெயர்தான்

அகில இந்திய நாதாறிகள் கட்சி சரியா தோழர்

said...

தோழர் மருதையன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்,( என் நினைவில் இருந்து..)

"போலச் செய்தல் என்பதே போலி என்பதன் அர்த்தம்.. இவர்களோ கம்யூனிஸ்டுகள் போல பேசுவதோ சிந்திப்பதோ கூட இல்லை"

சரியான காரியக் கிறுக்கர்கள்.. நேற்று செய்திச் சேனல்களில் அவர்களது தலைவர்களில் ஒருவர் வந்து இந்த பல்டிக்கு சமாளிக்க முன்றதைப் பார்த்திருக்க வேண்டும் நீங்கள்... அயோக்கியர்கள் இவர்களோடு ஒப்பிடுகையில் எத்தனையோ பரவாயில்லை என்று தான் தோன்றியது.. ஏனெனில் குறைந்தபட்சம் அவர்கள் தங்கள் செயல்களையும் அதன் உள்நோக்கங்களையும் மறைப்பதில்லை.. "ஆமாண்டா நான் அயோக்கியன் தான்" என்று ஒத்துக்கொள்ளும் நேர்மையாவது இருக்கிறது அவர்களிடம். இவர்களோ செய்வதெல்லாம் செய்துவிட்டு அதை மக்கள் முன் நின்று பசப்பல் வார்த்தைகளில் சமாளிக்கப் பார்க்கிறார்கள்.

said...

இவர்களை போலி என நாம் சொன்னால்

நம்மை இவர்கள் அமெரிக்க ஏஜெண்டுகள் என்பார்கள்

இப்ப அமெரிக்கவுடன் பேச தயார் என மழுப்பும் இவர்கள்தான் உண்மையான அமெரிக்க ஏஜெண்டுகள்

இந்த ஒரு விசயத்தில் நான் இவர்களை உண்மையானவர்கள் என்பேன்

எக்காரணத்திலும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள்

Anonymous said...

Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o Cresce.Net(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. If is possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll, I thank. Good bye friend.

said...

முழுக்க முழுக்க தன் இருப்பினை நீட்டிக்கும் யுத்தியைத்தான் மேற்கு வங்க "மார்க்ஸிஸ்டுகள்" செய்கின்றனர். அது தங்கள் உள்மாநில விவகாரமாக இருந்தாலும் சரி, இந்தியாவின் வெளியுறவு கொள்கை விவகாரமாக இருந்தாலும் சரி. நந்திகிராமிற்கு பிறகு, அணு பேரத்தில் தங்கள் நிலைப்பாடு பற்றி பல்டி அடிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு. இதன் மூலம், நந்திகிராம் பற்றிய 'கமிஷன்', 'அறிக்கை', முதலியவைகளைத் தவிர்க்கலாம் அல்லவா.

said...

:)