மார்க்சிய அரிசுவடி-பகுதி 3

பிரச்சனையின் சாரம்

எந்த ஒரு விசயத்திலும் நாம் தீர்வு கண்டுபிடிக்க
அந்த பிரச்சனையின் சாரத்தை அறிந்து கொண்டால் போதும்.
வேதியலில் அனுக்கள் நகர்வது விலகுவதும் எப்படி அதன் இயைபை பாதிக்குது என்பதை அறிய போதுமானதாகும் எனவே சாரமான விசயத்தை கற்றுகொண்டால் பிரச்சனையின் முழு தீர்வை அல்லாது அதன் சாரத்தை அறிந்தவர்கள் ஆவோம் .

எனவே உலகில் இதுவரை தோன்றிய தத்துவங்களின் பிரச்சனையே உணர்வுக்கும் பொருளுக்கும்உள்ள வேற்றுமையை விளக்குவதில்தான் இருந்தன என்றும் அதன் சாரம் இவ்வளவுதான் என்றும் நாம் உணர்ந்துகொள்ளும் போது இன்னும் முழுமை அடையாத ஆனால் சரியான திசைவழி செல்லும் தத்துவத்தை கையால் பற்றியவர்கள் ஆவோம்.

பிரபஞ்சத்தை படைத்தது சிந்தனையா:

ஒளியானது ஒரு வருடத்தில் ஒன்பது லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்வல்லது . இந்த தூரத்தை நாம் ஒரு ஒளியாண்டு எனலாம் சூரியன் மற்றும் கோல்களை ஒரு பகுதியாக கொண்ட பால்வெளியின் குறுக்களவு ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும் .

இந்த பால்வெளி மண்டலத்தை கொண்டுள்ள நாம் இருக்கும் பிரபஞ்சமானது மிக அரிதான் தொலை நோக்கிகள் கொண்டும் மிக நுட்பமான
கண்கியலின் அடிப்படையில் 2600 கோடு ஒளிஆண்டுகள் விட்டம் உடையது என அறிவியல் கூறுகிறது

இதில் சுய உணர்வும் , செயல் பாடும் கொண்ட பகுதி (space ) மிக குறுகியதாக வரையறுக்கப்பட்டுள்ளது அதில் உயிர் வாழும் ஜீவன்களின்
வாழ்வுகாலம் மிக குறைவாக வரையறுக்கப்பட்டுள்ளது
என எங்கெல்ஸ் கூறுவது சரியாகவே உள்ளது.

நீளத்திலும் அகலத்திலும் எல்லையற்றதாக விளங்கும் நேரமும் (time) இடமும்(apace) சிந்தனையால் படைக்கப்பட்டது எனும் கொள்கை மிகவும் தவறானது அல்லவா?

அகநிலை கருத்து முதல் வாதியான
பெர்க்லி (G.berkeley(1685-1753) கீழ்கண்ட வாறு சொல்கிறார்.

அகநிலை கருத்து முதல் வாதமும் பொருள்முதல் வாதமும்:

உலகத்தின் வலிமை மிக்க கட்டமைப்பில் அமையும் எல்லா பொருட்களும் மனதில் அன்றி வெளியே வாழமுடியாது (1)*

பெர்க்லியின் போதனைகளை நாம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்
1.நமது உணர்வுக்கு வெளியே ஒன்றும் இல்லை
2.ஏதாவது ஒன்று இருக்கிறது என்றால் நமது உணர்வுக்கு எட்டுகிறது என்று அர்த்தம் நமது உணர்வுக்கு எட்டவில்லை என்றால் அப்படி ஒரு பொருள் இல்லவே இல்லை என்று அர்த்தம்.

இதற்கு பொருள் முதல் வாதிகளின் பதில் என்ன நமது உணர்வுக்கு வெளியே எதுவுமில்லைன்னு சொன்ன பெர்க்லி எத்தனை முரண்பாடுகளை கொண்டு இருந்தார் அவருடைய வாதத்தில் என நாளை பார்ப்போம்
இன்னும் யாராலும் அசைக்கமுடியாததாக இருக்கும் மார்க்சியத்தில் அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடுவோம் :)

பெர்க்கிலி சொல்வதை பாருங்கள் படம் போட்டு இருக்கேன்




குறிப்பு :
*(1) the works of george Berkeley edited by george samson Vol 1 London P.181)

மார்க்சிய அரிசுவடி-பகுதி 2

தத்துவங்கள் என்பது ஒரு அறிதல் முறை

தத்துவங்கள் இல்லைன்னா நம்மால் ஒரு விசயத்தை
புரிந்துகொள்ள முடியாது .

தத்துவம் என்றால் என்ன ? அப்படின்னு கேட்டீங்கன்னா

தத்துவம் என்றால் உண்மை; உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள்.
(தத்துவத்தில் வறுமைன்னு மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதி இருக்கார் )

ஆகையால் தத்துவங்கள் தாம் உலகை பற்றி வியாக்கியானம் செய்ய ஆரம்பித்தன.

சரி கருத்து முதல் வாதத்துக்கு வருவோம் இன்னைக்கு இருக்கிற சாமி , பூதம் ,பேய் பில்லி சூனியம் முதல் உயர்ந்த ஆத்மா கோட்பாடு , ஒருமை கோட்பாடு (அத்வைதம் ) எல்லாத்தையும் கருத்து முதல் வாதத்தில் நாம் அடக்கிடலாம்

உலகை பற்றிய கருத்து சார்ந்த புரிதல்தான் மதம்னு சொல்லலாம் .
புறவுலகு என்பதே நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்குன்னு கருத்து முதல் வாதிகள் சொன்னார்கள்

பாம்பும் கயிறும் வேறுவேறாக தெரிவது நமது அகம் சார்ந்த விசயம் உண்மையில் அங்கே இருப்பது ஒன்றுதான் என்பன போன்ற கோட்பாடுகள் .
ஹெகல் சொன்னது முழுமுதல் கருத்து எனும் கோட்பாடு
உலகை பற்றியும் அதன் இருப்பு அதன் இயக்கம் பற்றியும் கருத்து முதல் வாதிகள் கருத்து ஒவ்வொன்றாக உடைய ஆரம்பித்தது எப்போன்னா
அறிவியல் வந்த பிறகுதான் .

எப்படி ஒன்னொன்னா கருத்து முதல் வாதிகளின் கருத்து உடைந்தது

மார்க்சிய அரிசுவடி

மார்க்சியத்தை பொருள் முதல் வாதம் கருத்துமுதல் வாதம் என இரண்டு மிக பெரிய தத்துவ நிலைபாடுகளின் அடிப்படையில் விளக்குவதுதான் சரி

என் வரையில் நான் ஒரு சில விளக்கங்களை கொடுத்து விடுகிறேன் கருத்துமுதல் வாதம் என்பது என்ன? இந்த உலகம் என்பது கருத்துக்களால் உருவாக்கப்பட்டது என சொல்லும் வகையினரே கருத்து முதல் வாதிகள் அதாவது சிந்தனை என்பது ஆதியில் இருந்தது அதுவே எல்லாவற்றையும் படைத்தது அந்த சிந்தனையை முழுமுதல் கருத்து என ஹெகல் விளக்கினார் நம்ம நாட்டில அதை பிரம்மம் கடவுள் சிவன் என சொன்னாங்க

இவர்கள் சொல்வது என்னவென்றால்ஒரு பொம்மை செய்யனும்னா அதை செய்யும் திட்டம் இருக்கனும் பிறகுதான் அது செய்யப்பட்டு இருக்கமுடியும் அதுபோல இந்த அகண்ட உலகம் ஒரு கருத்துல இருந்துதான் உதிச்சி இருக்கமுடியும் என சொல்கிறார்கள் .அதை சிலர் கடவுள் என்றும் சிலர் முழுமுதல் கருத்து என்றும் சொல்கிறார்கள் பொருள் முதல் வாதம் என்றால் என்ன ?பொருள் முதல் வாதம் என்பது உலகின் ஆதி முதலில் பொருள்தான் இருந்தது எனும் வாதம் கண்ணுக்கு தெரியும் புறப்பொருளை கன்ணுக்கு தெரியாத அகப்பொருள் படைத்தது எனும் கருத்தை நிராகரிக்கும் இவர்கள் மனித மூளை பிறந்த பிறகுதான் சிந்தனை வந்தது மனித மூளையோ சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் வந்து இருக்க முடியும் என சொல்கிறார்கள் .

அடுத்து கருத்து முதல் வாதம் யார் நலனில் அக்கரை கொண்டுள்ளது பொருள்முதல் வாதம் யார் நலனில் அக்கரை கொண்டுள்ளது அது ஏன் எப்படி வந்தது இந்த சார்பு நிலை என விளக்க முயலுகிறேன்