RSS காலிகள் அட்டூழியம்: கல்லூரி முதல்வர் மேல் கொலைவெறித் தாக்குதல்!!

காலித்தனம் என்பது இயற்கையாக உருவாவதல்ல. அது கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்ட ரீதியில் பழக்கப்படுத்தப்பட்டு ஏற்படுவது. பார்ப்பன பயங்கரவாதிகள் குஜராத்தில் ஆடிய ரத்த வெறியாட்டம் அப்போது சட்டென்று தொடங்கிய ஒன்றல்ல, மாறாக பல ஆண்டுகளாக தமது ஆக்டோபஸ் கரங்களில் ஒன்றான வனவாசி கல்யான் ஆஸ்ரம் என்னும் அமைப்பு மூலம் பழங்குடியினர் மத்தியில் ஆயிரக்கணக்கில் ஓராசிரியர்பள்ளிகள் நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாக இந்து வெறியை, ரத்த பசியை தூண்டி விட்டு பிறகு அதன் மூலம் ஏற்பட்ட அறுவடை தான் சிலஆயிரம் முசுலிம் மக்களின் உயிர்கள்!

முளைக்கும் போதே களையாக முளைக்க வைத்து விட வேண்டும் என்பதில் இந்த பார்ப்பன பயங்கரவாதிகள் மிக கவனமாக இருக்கிறார்கள். அப்படிமானவர்களை மயக்கி, அவர்களிடையேயும் தமது பயங்கரவாத செயல்களுக்கான ஆதரவு தளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கவனமாக திட்டம் தீட்டி எம்.எஸ்.கோல்வால்கர் என்னும் நபரின் வழிகாட்டுதலோடு உருவாக்கப்பட்ட அமைப்பு தான் எ.பி.வி.பி என்னும் அகில பாரத வித்யார்த்திபரிசத் என்னும் அமைப்பாகும். நாடெங்கும் இருக்கும் பள்ளி கல்லூரிகளில் பரவும் விஷம் போல் இந்த அமைப்பு பரவி வருகிறது.

அவ்வப்போது ஆசிரியர்களை கொலை செய்வது, மானவிகளை மானபங்கப்படுத்துவது போன்ற செயல்களின் மூலம் தமது இருப்பை இவர்கள் காட்டிக் கொண்டே இருப்பார்கள். 2006ம் ஆண்டு உஜ்ஜைனி பல்கலைக்கழகத்தில் வைத்து ஹெச்.எஸ்.சபர்வால் என்ற பேராசிரியரைக் கொன்ற இந்த குரங்குக் கூட்டம் பிறகு 2007ம் ஆண்டு வி.சி.சொராஸ்யா என்னும் அன்றைய முதல்வரை ஹாக்கி மட்டையால் அடித்து கொலை வெறியாட்டத்தைநடத்தி முடித்தது. http://timesofindia.indiatimes.com/India/ABVP_at_it_again_beats_up_principal/rssarticleshow/2291639.cms

இதோ இந்த ஆண்டுக்கான தமது வன்முறைக் கணக்கை நேற்று அதே உஜ்ஜைனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆஷிஷ் மேத்தா என்பவரை தாக்கி படுகாயப்படுத்தியதன் மூலம் தொடங்கியிருக்கிறார்கள். பரீட்சையில் காப்பியடிக்க அனுமதி மறுத்ததே இந்த தாக்குதலுக்கு காரணம்!

இப்படி வளரும் இளம் தலைமுறையினருக்குள் ஊடுருவி படிக்கும் காலத்திலேயே எல்லாவித மொள்ளமாரித்தனத்தையும் மானவர்கள் மத்தியில் பழக்கப்படுத்துவதேதமது இலக்காகக் கொண்டு இவ்வமைப்பு செயல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. இவர்களை இவர்களை சல்லி வேர் வரைக்கும் விட்டு வைக்காமல் ஒழித்துக் கட்டுவது ஒன்றே நம் முன் இன்றைக்கு இருக்கும் முக்கிய கடமையாக இருக்கிறது.

இது பற்றி NDTVல் வந்த செய்தி -
Wednesday, January 9, 2008 (Ujjain)Remember the shocking murder of Professor Sabharwal in Ujjain? Now there is one more case of violence in a campus in Ujjain, once again involving activists of the ABVP, the BJP's student arm.

Two ABVP activists reportedly went up to the principal of a private college, and demanded that their friends be allowed to cheat in exams.

When they were denied that, they beat up 32-year-old Professor Ashish Mehta and are now missing. The incident happened at 4 pm and the principal got mild injuries.
When exams are going on in professional courses, the two ABVP activists Vimal Shastri and Bhanu Bhodoria entered the principal's office and told the principal that he should let their friends cheat during exams.

When principal refused, they threatened him with dire consequences and then slapped him and beat him up.

FIR has been registered, the accuseds are absconding.

http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080038161&ch=1/9/2008%2011:30:00%20PM

அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!


1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது.

மனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.

அப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த "அதிவேக ஈனுலைகள்" யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.

ரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.
..ஆனால் இப்போது '123 ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.

இந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.

ஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.
இப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.

அதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத 'நிமிட்ஸ்' போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.
அணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..

இப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.

"நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது." என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.

அமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா?
இந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.

"ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து" மன்மோகன் சிங் "உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.
எனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.

இந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.

ஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
உடனே 'தோழர்கள்' கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.

கடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.
இந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.

நன்றி:கோபா
நன்றி: http://123-agreement.blogspot.com/2007/09/123.html

சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்!!

இந்த பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சின் ஆழத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத வலியை உண்டாக்கும்.

sollaatha soogam.w...






உணர்வூட்டும் வேறு பாடல்களுக்கு http://www.tamilcircle.net/ தளம் செல்லவும்.