சோதனைப் பதிவு

சோதனைப் பதிவு

இயங்கியல்
(மக்களுக்காக சிந்தித்த மாமேதை மார்க்ஸ்)

தத்துவம்:

இயற்கை ,மனித சமுதாயம் ,சிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சியின் மீது

ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த விஞ்ஞானமே தத்துவஞானமாகும்.

தத்துவஞானிகள் பொதுவாக உலகத்தை பத்தி வியாக்கியானம் செய்து உள்ளார்கள்

(உதாரணம் : சங்கரர்- அத்தவைதம் பிரம்மம் சத்யம் ஜகத் மித்யை அதாவது இருப்பது பிரம்மம் ஒன்றுதான் உலகம் இருப்பதாக சொல்வது மாயை என்பது.
ஜெ.கிருஸ்ணமூர்த்தி போன்றோர் பிரச்சனைகள மனிதனுக்குள் உள்ளன அவற்றை வெளியே தேட வேண்டாம் என்றார்கள்.ரமணர் உள்நோக்கிய நான் யார் எனும் கேள்விகளை கேட்பது அதன் மூலம் பிரச்சனைகள் தனக்கு அல்ல தனது உடலுக்கு என தெளிவது நான் அழிவற்ற ஆன்மா என உணர்வது .என்பன போன்ற ஏராளமான தத்துவங்களை காணலாம் )

ஆனால் விசயம் என்னவென்றால் மக்களின் பிரச்சனையை தீர்க்க இவற்றால் இயலாது என்பதை நாம் காணலாம் இந்நிலையில் அவை வெறும் ஏட்டு சுரக்காயாகவும் மிக சிறுபாண்மையாரோல் படிக்கப்படும் திண்ணை தத்துவங்களாக மாறிப்போய்விட்டன .

தத்துவ துறையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் அறிவியல் அனுகுமுறையே இயங்கியல் பொருள்முதல்வாதம் எனப்படுகிறது.

அதைப்பற்றி இங்கு காண்போம்

♣ மார்க்ஸ் எங்கெல்ஸ்க்கு முன்பு இயங்கியலும் பொருள்முதல் வாதமும் பல அறிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டன மனித சிந்தனையின் ,பகுத்தறிவின் ஆக உயர்ந்த வடிவமான இயங்கியல் பொருள்முதல்வாதம் இருக்கிறது .சாதாரண சிந்தனைக்கு சற்று கடினமாக தோன்றும் அதை புரிந்து நடைமுறைக்கு உபயோகிக்க தொடங்கி விட்டால் எத்தனையோ சிக்கல்களை அவிழ்க்க வழி பிறப்பதை காணலாம்.( மற்ற தத்துவங்களை அன்றாட பிரச்சனைக்கான தீர்வாகவோ அல்லது கருவி(tool )ஆகவோ உபயோகிக இயலாது என்பதை நீங்கள் இனிமேல் கான்பீர்கள் .

♣ எல்லாம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன எப்போதும் இயங்கி கொண்டே இருக்கின்றன . ஏதோ ஒன்று தோன்றிக்கொண்டேயும் எதோ ஒன்று மறைந்து கொண்டேயும் இருக்கின்றது .இந்த மாறுகின்ற போக்கு ஒன்றே நியாயமானது
(உதாரணங்கள்: வளர்ந்து கொண்டும் பட்டு போய் கொண்டும் இருக்கும் தாவரம் உள்ளிட்ட சகல உயிரினங்களும்
மாறுதல் : உலகம் மாயை என்ற கருத்தை இது நிராகரிப்பதோடு உலகம்
இயங்கிகொண்டுள்ள ஒரு நிஜ வஸ்து என ஒப்புகொள்கிறது)

♣ இயக்கம் படைக்கப்பெறாதது ; அழிக்கப்படாதது ; இயக்கமானது பருபொருளின் உள்ளிருக்கும் இயல்பாகும் அதன் இருத்தலின்
பாங்காகும் என்பது பொருள்முதல் வாதத்தின் கோட்பாடு கூறுகிறது.

♣ உலகம் என்பது பொருட்களின் சேர்க்கை அல்ல: நிகழ்ச்சி போக்குகள்,உறவுகள்,தோடர்புகள் ஆகியவற்ரின் சேர்க்கையே. எல்லா புலப்பாடுகளிலும் உள்ளார்ந்த முரண்பாடுகள் இருக்கின்றன.

♣ பொருள்வகை உலகுடம் உணர்வு கொண்டுள்ள உறவு பற்றிய பிரச்சனையே தத்துவஞானம் முழுமைக்கும் மாபெரும் அடிப்படை பிரச்சனையாகும். பொருள்வகை உணர்வு அல்லது இயற்கைதான் ஆன்மாவை தோற்றுவிக்கிறது என்கிறது பொருள்முதல்வாதம்.
(ஆனால் கருத்துமுதல்வாதிகள் முழுமுதல் கருத்துதான் (கடவுள்)தான் உலகை தோற்றுவிப்பதாக சொல்வதை மறுக்கிறது )

♣இயங்கியல் பொருள்முதல் வாதம் பற்றிய மார்க்ஸிய தத்துவத்திற்கு

இரண்டு சிறப்பியல்புகள் உள்ளது . ஒன்று அதன் வர்க்க இயல்பு;
(இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பது பாட்டாளிவர்கத்திற்கு சேவை செய்வது என்று அது வெளிப்படையாக பிரகடனம் செய்கிறது)

♣மற்றொன்று நடைமுறை படுத்துவதற்கான அதன் சாத்திய பாடு ( தத்துவம் நடைமுறை படுத்துவதில் தங்குவதை அது வலியுறுத்துகிறது
தத்துவம் நடைமுறையை ஆதாரமாக கொண்டது , மீண்டும் நடைமுறை படுத்துவதற்கே பயன்படுகிறது என்று அது வலியுறுத்துகிறது- மாவோ)

எனவேதான் மார்ஸிய தத்துவம் எப்போதும் புதுமையானதாகவும்
புரட்சிகரமானதாகவும் இருக்கிறது

ஏனெனில் நடைமுறை என்பது எப்போதும் நிகழ்காலத்தில் நடக்கும் போக்குதான்

அடுத்து இயங்கியலின் விதிகளை பார்போம் .....

சோசலிசம் பற்றி

இது ஒரு நண்பரின் கட்டுரை

அவருக்கு நன்றி

மார்ஸிய அடிப்படைகள் பற்றி இன்னும் எழுத ஆரம்பிக்க வில்லை

வர்க்கச் சுரண்டலையும் ஏற்றத் தாழ்வுகளையும் பாலின ஒடுக்குமுறையையும் முடிவுக்குக் கொண்டுவந்து மானுட சுதந்திரத்தை உறுதிப்படுத்தி அதை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிமுறையே சோசலிசம். குடிமை உரிமைகளுக்கு (இண்ஸ்ண்ப் ழ்ண்ஞ்ட்ற்ள்) சட்டவகைப்பட்ட உத்திரவாதங்கள்; முறையாகவும் அரசிடமிருந்து சுயேச்சையாகவும் சுயாதீனமாகவும் நிலவும் பொது மக்கள் கருத்து; மூடிய கதவுகளுக்குப் பின்னாலன்றி வெளிப்படையாக நடத்தப்படும் அரசியல்; ஒரு சுதந்திரமான பத்திரிகை உலகம்; பல்வேறு கருத்துகளுக்கு இடம் கொடுக்கக் கூடிய ஓர் அரசியல் கட்டமைப்பு ஆகியனதான் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலுமுள்ள அற்பத்தனமான அல்லது அப்பட்டமான சர்வாதிகாரங்களுக்கு முடிவு கட்டும்; திரை மறைவு சூழ்ச்சிகளிலிருந்தும் சொல்ஜாலப் புரட்டுகளிலிருந்தும் பொதுமக்களைக் காப்பாற்றும். அதாவது, பொதுவாகச் சொல்லப்போனால் நீதிக்கான தேடலையும் மானுடவாழ்வின் உண்மையான இலக்குகளுக்கும் இலட்சியங்களுக்குமான தேடலையும் அரசியல் செயல்பாட்டின் முதன்மையான குறிக் கோளாக ஆக்க வேண்டும். ஒப்பீட்டு நோக்கில் முன்னைக் காட்டிலும் கூடுதலான பொருளாதார வளர்ச்சியை, பொருளாதாரச் செழிப்பை, பொருள்களின் பகிர்வில் ஓர் அதிகரிப்பைச் சோசலிசம் இல்லாமலேயே சாதிக்க முடியும். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் இதைத்தான் செய்துள்ளன. ஆனால் மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகள் வெறும் பொருள்களுக்கிடையே உள்ள உறவுகளாக, அவர்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ளும் உறவுகளாக இருப்பதை மாற்றியமைத்து அவற்றை மானுடத்தன்மையாக்குவதே சோசலிசம்.

மரக் கலப்பைகளின் நாடாக இருந்த ரஷ்யாவை இயந்திர உழுவைகளின் நாடாக மாற்றிய ஸ்டாலினின் சாதனைகள், "சோசலிசம்' என்பதற்கு நான் கொள்ளும் அர்த்தம் கொண்ட ஒரு விஷயத்தை ஒரு போதும் எட்டிப்பிடிக்கவில்லை. அதற்கு ஸ்டாலின் என்ற தனிநபர் மட்டும் காரணமல்ல; உள்நாட்டு, உலக நிலைமைகளும் காரணம். எப்படியிருப்பினும் சோசலிசத்திற்கான மறுமுயற்சிகள் உலகில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டன, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (கார்ல்) மார்க்ஸ் கூறினார்:

". . . பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் தொடர்ச்சியாகத் தங்களைத் தாமே விமர்சித்துக் கொள்கின்றன; தங்களுடைய வழிப்பயணத்தை அடிக்கடி நிறுத்திக்கொள்கின்றன; பார்வைக்குச் சாதிக்கப்பட்டது மாதிரித் தோன்றும் கட்டத்துக்கே மறுபடியும் வந்து, முதலிலிருந்து மறுபடியும் தொடங்குகின்றன. தங்களுடைய முதல் முயற்சிகளின் பலவீனங்களையும் குறைபாடுகளையும் அற்பத்தனங்களையும் ஈவிரக்கமின்றிக் கண்டனம் செய்கின்றன. தங்கள் எதிரியைப் பூமியிலே தூக்கியெறியும்பொழுதுகூட அவன் பூமியிலிருந்து புதிய பலத்தைப் பெற்றுக்கொண்டு முன்னைக் காட்டிலும் பலவானாகத் தங்களுக்கு முன்னால் வரவேண்டும் என்று ஆசைப்படுவதுபோலத் தோன்றுகிறது (லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்)

இது 19ஆம் நூற்றாண்டுப் புரட்சிகளுக்கு மட்டுமல்ல, 20, 21ஆம் நூற்றாண்டுப் புரட்சிகளுக்கும் பொருந்தும். ஸ்டாலினிசத்தோடு சோசலிசம் முற்றுப்பெற்றுவிட்டது அல்லது அழிக்கப்பட்டுவிட்டது என்ற வரலாற்றுத் தன்மையற்ற, கருத்து முதல்வாத, இயக்க மறுப்பியல் முடிவுகளுக்கு எதிரான கருத்தாகும்.

வாழ்க்கைக்குறிப்பு

கார்ல் மார்க்ஸ், தற்போது ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5ம் திகதி பிறந்தார். அவர் 1824 இல் கிறிஸ்துவராக மதம் மாறிய ஒருயூதரான ஹைன்றிஷ் மார்க்ஸ் எனும் வசதி படைத்த வழக்கறிஞர் ஒருவரின் மூன்றாவது மகனாவார்.

பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டம், வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்றார். யெனா பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தினை பெற்றார்.

1841 இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சிலகாலம் பத்திரிகைத்துறையில் இருந்தார். சிறிது காலத்திலேயே ஜனவரி 1, 1843இல் தடைக்குள்ளான றைனிஷ் ஸைற்றுங் எனும் எதிர்க்கட்சி செய்தி ஏட்டின் ஆசிரியராக இருந்தார்.

இக்காலப்பகுதியில் லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகள்ளான் 21 வயதுடைய ஜெனியுடன் மார்க்ஸுக்கு காதலுறவு ஏற்பட்டது. இதன்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக்குடும்பத்தைச்சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக 8 ஆண்டுகள் தமது காதலை இரகசியமாக வைத்திருந்து ஜெனிக்கு 29 வயதாயிருந்தபோது அவரை மார்க்ஸ் திருமணம் செய்துகொண்டார்.

பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய நாடுகளிடையே ஒவ்வொன்றினதும் புரட்சிகர இயக்கங்களில் பங்குபற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடுகடத்தப்பட்ட மார்க்ஸ், 1843இற்கும் 1849 இற்கும் இடையே புலம் பெயர்ந்த வாழ்க்கையினை வாழ்ந்தார்.

1849 ஓகஸ்ட் 24 இல் பிரான்சில் உள்ள பிறிற்றனியில் சதுப்பானதும் உடல் நலத்துக்கு ஒவ்வாததுமான இடமொன்றுக்கு நாடுகடத்துமாறான பிரேஞ்சு அரசாங்கத்தின் ஆணைக்கு பணிய மறுத்து லண்டனுக்கு சென்று குடியேறி 35 ஆண்டுகளான தனது சீவியகாலத்தின் மிகுதியை அங்கேயே வாழ்ந்தார். அக்காலத்தில் இங்கிலாந்து ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் அகதிகட்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெருமெடுப்பில் கட்டப்பட்ட பிரமாண்டமான பிரித்தானிய மியூசியத்தின் நிர்மாண வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்ஸ் நாள் தவறாது அங்கு சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்கு செலவிட்டு வந்தார். அங்கேதான் மூலதனம் எனும் நூல் தோற்றம் பெற்றது.

மார்க்ஸ், ஏங்கல்சை 1844 ஓகஸ்ட் 28க்கும் செப்டெம்பர் 6க்கும் இடையே பாரிசில் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவரும் தம்மிடையே நட்புறவு கொள்ள ஆரம்பித்தனர்.

நாடுகடந்து லண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்ஸ் தீவிரமான வறுமைக்குள்ளானார். தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடைமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டு வெளிக்கிட முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார்.

முற்போக்கு பத்திரிகையான நியூயோர்க் - டெய்லி ற்றிபியூனுக்கு ஆக்கங்கள் எழுதிவந்தபோதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அவ்வேட்டின் ஐரோப்பிய ரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண் பணம் வழங்கப்பட்டது . ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பிரசுரமாகவில்லை. 1862 வரை ற்றிபியூனுக்கு எழுதி வந்தார்.

மார்க்சின் பெற்றோரு இறந்த சமயம் அவருக்கு மரபுரிமையாக சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் கழகத்தின் பதிநான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் இடமிருந்து ஆறு நூறு பவுண் அளவில் விருப்புரிமைக்கொடையை மரபுரிமையாக பெற்றார். 1869 இல் தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்ஸ் ஒரு செல்வந்தரானபோது மார்க்சுக்கு 350 பவுண் ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார்.

Georg Wilhelm Friedrich Hegel என்பவரின் தர்க்கமுறை மற்றும் வரலாற்று பார்வை அடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்காடோ என்பவர்களின் தொன்மை அரசியல் பொருளியல் கருத்துக்கள் பிரான்சு தத்துவவியலாளர் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் என்பனவற்றால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார்.

மார்க்ஸ் தன்னை பற்றி

கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அன்னாரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தை தருகிறது.

நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதல்ல. எனக்கு நீண்டகாலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்க்ளும் விபரித்துவிட்டார்கள். நான் புதிதாக செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான்

1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.

2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்.

3. இந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமானது வர்க்கங்களினதும் வர்க்க சமுதாயத்தினதும் அழிவிற்கான இடைமாறு நிலையை மட்டுமே அமைத்துக்கொடுக்கும்.

- மார்ச் 5, 1852 Weydemeyer க்கு எழுதப்பட்ட கடிதம்

காரல் மார்க்ஸ்


கார்ல் மார்க்ஸ் (கார்ல் ஹென்ரிச் மார்க்ஸ், Karl Heinrich Marx, மே 5, 1818, ஜேர்மனிமார்ச் 14, 1883, லண்டன்) ஜேர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார்.

மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.

பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளாரெனினும் இவரது ஆய்வுகளினதும், கருத்துக்களினதும் அடிப்படை, வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வுசெய்தல் என்பதாகும்.