மார்க்சிய அரிசுவடி-பகுதி 6

சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும் உறவுகள் என்னனென்ன? . என்ற கேள்விக்கு
இரண்டே இரண்டு விடைகள்தான் இருக்க முடியும் . அந்த விடைகள்
ஒன்றுக்கு ஒன்று முரணானவை என்பதை நாம் பார்க்கிறோம்

இந்த கேள்விக்கு கருத்துமுதல் வாதம் என்ன விடை பகர்ந்தது
என்பதை இதுவரை கண்டோம் .

இந்த கேள்விக்கு பொருள்முதல்வாதம் என்ன விடை தருகிறது
என்பதை இப்போது பார்ப்போம்.

பொருள்முதல்வாதம் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில்
என்னென்ன வகையாக மாறி வந்துள்ளது என்பதை பார்க்கவேண்டும் முதலில்

ஏனெனில் எந்த கருத்துக்கும் ஒரு வரலாறு இருக்கும் அல்லவா?

மனிதனின் அறியாமையில் இருந்து கருத்துமுதல் வாதம் பிறந்தது
சமுதாய வரலாற்றிலே ஆன்மீக கருத்தோட்டங்களை ஆதரித்த சக்திகள்
எல்லாம் இந்த அறியாமையை பேணிப்பாதுகாத்து ,வளர்த்து வந்தன.
ஆகவே அறியாமையை ஆன்மீகவாத அல்லது கருத்துமுதல் வாதம்
வளர்த்து வந்தது என்றால் இந்த அறியாமையை எதிர்த்து விஞ்ஞானம்
நடத்திய போராட்டத்திலே பொருள் முதல் வாதம் பிறந்தது.

விஞ்ஞானம் பொருள்முதல்வாதத்தின் பக்கம் இருப்பதனாலேயே
அதை எதிர்த்து கடுமையான போராட்டங்களை ஆன்மீகவாதம்
நடத்தி வந்து இருக்கிறது வரலாற்றில்.

பொருள்முதல்வாதம் என்ன சொல்கிறது?
-------------------------------------------------------

வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் இடையே,பொருளுக்கும் ஆன்மாவுக்கும் இடையே
ஒரு குறிப்பிட்ட உறவு உண்டு என்று பொருள்முதல்வாதிகள் பளீரென பதில்
அளிக்கிறார்கள்

பொருள்முதல் வாதிகளுக்கு வாழ்நிலைதான் பொருள்தான் மூல ஆதாரமான
அம்சம். அதுதான் முதலில் இருந்தது ; ஆன்மா என்பது மனம் என்பது
இரண்டாம் பட்சமானது. பொருளுக்கு பின்னால் அது வந்தது அது பொருளை
சார்ந்துதான் ஆன்மா இயங்குகிறது.

"மனம் என்பது பொருளின் அதிஉன்னதமான படைப்பே தவிர வேறில்லை"
என்கிறார் எங்கெல்ஸ் (லுத்விக் பயர்பாக்ஸ் என்ற நூலில்)

மனிதன் எப்படி சிந்திக்கிறான் என்றால் கருத்துமுதல்வாதிகள் ஒரு பதில்
சொல்வார்கள் ஆனால் பொருள்முதல் வாதிகள் இப்படி சொல்வார்கள்
அதாவது மூளை என்ற ஒன்று இருப்பதனால்தான்மனிதன் சிந்திக்கிறான் என்று.

பொருள்,வாழ்நிலை என்பது பிரத்யட்ச உண்மை; அவை நம் மனதிற்கு வெளியே
நிலைபெற்று உள்ளன; மேலும் அவை இருந்து இயங்குவதற்கு சிந்தனையோ,மனமோ
தேவையில்லை. அதேபோல பொருள் (மூளை ) இல்லாமல் சிந்தனை இருக்கவே
முடியாது . பூதவுடலை சார்ந்து நிற்காமல் சுதந்திரமாக சுயம்புவான ஆன்மா
ஒன்று இருக்கவே இயலாது என்பதாகும்.

சரி பெர்க்கிலி சொல்லியவற்றிற்கு பொருள்முதல்வாதம் என்ன பதில்
சொல்கிறதுன்னு பார்ப்போம்

1.நம் சிந்தனையில் மட்டுமே பிரபஞ்சம் இருக்கிறது என்பது உண்மையா

இதில் அகநிலை யதார்த்தம் புறநிலை யதார்த்தம் என்ற இரண்டு வருகிறது

பிரபஞ்சம் என்பது ஒரு அகநிலை யதார்த்தம் என அகநிலை கருத்துமுதல்
வாதிகள் சொல்கிறார்கள்

பிரபஞ்சம் என்பது புறநிலை யதார்த்தம் என பொருள்முதல் வாதிகள் சொல்கிறார்கள்

பிரபஞ்சமும் ,பொருட்களும் நம் சிந்தனைக்குள்தான் இருக்குன்னு பெர்க்கிலி நிரூபிக்க
முயல்கிறார் அதற்காக முதலில் அந்த பொருட்களை குணாம்சங்களாக எடுத்துகொண்டு
(நிறம்,மணம்,பருமன்)அவற்றை பிரித்து சித்தரிக்கிறார்.

1.யார் யார் தங்களுடைய ஐந்து புலன்களின் மூலம் பொருட்களை காண்கிறார்களோ
அதற்கு தக்கவாறு குணாம்சங்கள் மாறுகிறது அதனால் அந்த பொருள்களுக்குள்
குணாம்சங்கள் இல்லை என்றும் அவை எல்லாம் நம் ஒவ்வொருடைய மனதில்தான்
இருக்கிறதென்றும் எடுத்துகாட்டுகிறார்

2இதிலிருந்து ஒரு முடிவுக்கு வருகிறார் அதாவது பொருள் என்பது குணாம்சங்களின்
தொகையே இவை அகநிலையில்தான் இருக்கிரது புறநிலையில் இல்லை
எனவே பொருள் என்று ஒன்று இல்லை .

இதற்கு பதில் கூறுகிறார்கள் பொருள்முதல் வாதிகள் எப்படி

உதாரணமாக சூரியன் என்ற உதாரணத்தை எடுத்துகொண்டு அதை விவரிக்கும்
பெர்க்கிலி சூரியன் வட்டவடிவமாக சிகப்பு தட்டா தெரியுதா அது ஒரு புறநிலை
யதார்த்தம் என சொல்றீங்களா என கேட்டுவிட்டு தர்க்க முறைப்படி
சூரியன் சிகப்பாகவும் இல்லை வட்டதகடாகவும் இல்லை என சொல்லி ஆகவேச்
சூரியன் என்பது புறநிலை யதார்த்தம் அல்ல என வாதிடுகிறார்.

ஆனால் விஞ்ஞானத்தை துணைக்கழைத்து இந்த விசயத்தை ஆராயும் நாம்
சூரியன் இருக்கத்தான் செய்கிறது என்பதை நிரூபிக்கிறோம்.

நாமும் பெர்க்கிலி சொல்லுவதுபோல சூரியன் வட்டதகடாகவோ சிகப்பாகவோ
இல்லை என்பதை ஒத்துகொள்கிரோம் ஆனால்

இப்போ விவாதம் அதுவல்லவே பொருட்களின் குணாம்சங்களையா பேசுகிரோம்
அல்லவே அல்ல பொருட்கள் உண்டா இல்லையா ? என்பதுதானே கேள்வி

அது வட்டமா இருக்கு சிகப்பா இருக்கு அல்லது வேற மாதிரியா இருந்துட்டு போகுது
அது இருக்கா இல்லையான்னா ? நேரடியான பதில் இல்லை பெர்க்கிலியிடம்

பொருள்வகைப்பட்ட யதார்த்தத்தை நம்புலன்கள் திரித்து கூறுகின்றனவா என்பதல்ல
இங்கு விவாதம் அதற்கு பதிலாக இந்த யதார்த்தம் நம் புலன்களுக்கு அப்பால்
புலன்களுக்கு வெளியே இருக்கிறதா இல்லையா என்பதே விவாதம்.

சரி அவர்கள் கூறுவது போலவே நம் சிந்தனைக்குட்பட்டுதான் பிரபஞ்சம் இருக்குய்யான்னு
சொல்வோம் .

மனிதன் உண்டாவதற்கு முன்பு பிரபஞ்சம் இருந்ததா இல்லையா ?

ஆக மனிதன் மனம் இவை எல்லாம் உண்டாவதற்கு முன்பே பிரபஞ்சம்
இருந்தது என்பதுதான் உண்மை இது விஞ்ஞானம் கூறும் உண்மை .

மேலும் பெர்க்கிலியின் இரண்டு வாதங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்
.

2 comments:

said...

//பொருள்,வாழ்நிலை என்பது பிரத்யட்ச உண்மை; அவை நம் மனதிற்கு வெளியே
நிலைபெற்று உள்ளன; மேலும் அவை இருந்து இயங்குவதற்கு சிந்தனையோ,மனமோ
தேவையில்லை. அதேபோல பொருள் (மூளை ) இல்லாமல் சிந்தனை இருக்கவே
முடியாது . பூதவுடலை சார்ந்து நிற்காமல் சுதந்திரமாக சுயம்புவான ஆன்மா
ஒன்று இருக்கவே இயலாது என்பதாகும்.

//


அதாவது பூமி சுரியனை சுத்தி வருவது
என்பது நமது மனதை பொருத்த செயல் அல்ல

Anonymous said...

நண்பரே

படைப்பு என ஒன்று இருந்தால் படைத்தவன் என்று ஒருவன் இருக்கவேணும் அல்லவா?