தேவரின் பெயரால் பிழைப்பு வாதம்

தேவர் பெயரும் ஓட்டு வங்கியும்
------------------------------------------
செய்தி :நன்றி சற்றுமுன்

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வரதராஜன் வெளியிட்ட கருத்து தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முத்துராமலிங்கத் தேவர் ஒரு ஜாதித் தலைவர் என்றும் அதனால் அவரது பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்கக் கூடாது என்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வரதராஜன் பேசியிருப்பது அறியாமையின் வெளிப்பாடா அல்லது அறிந்தே பேசினாரா எனத் தெரியவில்லை.

நாடு முழுவதும் போற்றப்படும் தலைவர்களை, மக்கள் அவர்களது பண்பாலும், பாராட்டத்தக்க செயலாலும் மட்டுமே நினைவு கூறுகின்றனர். அவர் எந்த ஜாதியில் பிறந்தார் என்பதைப் பார்ப்பதில்லை. முத்துராமலிங்கத் தேவர் தேசியம், தெய்வீகம் என்ற இரு அம்சங்களுக்காக வாழ்ந்தவர் என்பதற்காகவே போற்றப்பட வேண்டியவர் என்றார்.

விமர்சனம் : தியாகு

சிலைகள் வைப்பதும் அதை திறந்து வைக்க விழா எடுப்பதுமாக தலைவர்கள் நாட்டு உழைத்தவர்களின் மேல் ஆளும் திமுக அரசும் இதற்கு முன்பு ஆண்ட அரசுகளும் காட்டி வரும் அக்கரையை நன்றாக கூர்ந்து நோக்கினால் .

ஓட்டு கணக்குதான் பிரதானமாக தெரிகிறது.

மதுரையில் மருதுசகோதரர்கள் சிலையை திறந்து வைத்தது மருது சகோதரர்கள் ஏற்றி வைத்த அன்னிய ஆதிக்க உணர்வை மீண்டும் கிளர்ந்தெழ செய்யும் நோக்கமா? இல்லை முக்குலத்தோரில் ஒரு குலமான சேர்வை இனத்தவரின் ஓட்டு வங்கியை பிரிக்கும் நோக்கம் தானே தவிர தூய தேசிய நோக்கம் எல்லாம் இல்லை இதில்.

இந்நிலையில் தேவரின் பெயரை சூட்டினார் தேவர் ஒரு சாதி தலைவர் என வரதராஜன் சொன்னதை கேள்வி கேட்கும் இல கணேசன்

தேவர் ஒரு தேசிய தெய்வீகத்தலைவர் என்கிறார்

இம்மானுவேல் கொலைவழக்கில் குற்றம் சாட்டபட்ட
ஒரு சாதி ஆதிக்க தலைவரை தேசிய மற்றும் தெய்வீக தலைவர் என இவர் எதற்காக சொல்கிறார் என்றால்

எந்த தேசியம் இவர்களுடையது ஆதிக்க சாதிகளின் தேசியம் இந்த தெய்வீகம் இவர்களது பார்பனிய தெய்வீகம் .

இந்தியாவில் பார்பனியத்தின் மீது தாக்குதல் விழுந்தால்
உடனே குரல் பஜகவிடம் இருந்து வருவது அதன் பார்பனிய ஆதரவு சிந்தாந்தம்

சாதி தலைவர் பெயரை வைப்பது

கலைஞரின் பிழைப்பு வாதம் நேராக

பார்பனியத்துக்கு வால்பிடிக்கிறது .

அதே நேரத்தில் வரதராஜன் பார்பனிய விரோதியா என்றால் அதை இன்னொரு நிகழ்வில் பேசலாம்

3 comments:

Anonymous said...

It is true that the present Chief minster aims at vote banks on the assumption that the thevar community is the single largest one in Tamil Nadu. History can not forget that Mr. Muthuramalinga thevar went to gail for the Murder of Immanuel and that he died in prison. The then court proceedings have proved beyond doubt that he was the sole instrument that directed the actual culprits to muder Immauel

said...

பெருந்தலைவர் காமராசரையே அவமதித்த சாதி வெறியன் மு.ரா.வுக்கு இன்று சிலைகள், அவன் பெயரில் விமான நிலையம்.

இமானுவெலை திட்டமிட்டு கொலைசெய்த கிரிமினல்.

இதுதான் இன்றைய தமிழ்நாடு!

;-(

Anonymous said...

தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்ட ஜாதி வெறியன் முத்துராமலிங்கம் பெயரை மதுரை
விமான நிலையத்திற்கு வைப்பதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன். திருமா இன்னுமா திமுக கூட்டனியில் இருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மதுரை விமான நிலைத்திற்கு பழைய பெயர் மாற்றும் வரை பயன்படுத்தகூடாது, மாறாக பெயர் மாற்ற போராட்டம்
நடத்தவேண்டும்.