மார்க்சிய அரிசுவடி-பகுதி 5

இதுவரை பெர்க்கிலி பாதிரியார் என்ன சொல்கிறார் என புரியாதவர்களுக்கு

ஒரு தொகுப்புரை தரலாம்னு நினைக்கிறேன் .

ஏன்னா எதையும் தொகுத்து பார்த்தா புரியாம இருக்கிறதும் புரியும் .

தத்துவஞான ரீதியாக அகவியல் கருத்துமுதல் வாதம் அல்லது ஆன்மீக வாதம்
என்றால் என்னவென பெர்க்கிலிதான் ஒளிவு மறைவு இல்லாமல் பட்டவர்த்தனமாக
விவரித்தார்.

"நமது மனதுக்கு அப்பால், மனதுக்கு வெளியே ஒன்று இருப்பதாக நினைத்துகொண்டு
எதை நம்புகிறோமோ அது பொருள் அல்ல . பொருட்கள் உண்டு என நாம் நினைப்பதற்கு
காரணம் நாம் அவற்றை கண்ணால் காண்கிறோம் ,கையால் தொடுகிறோம்
என்பதுதான். இப்படி பட்ட உணர்ச்சிகளை நமது புலன்களுக்கு அவை கொடுப்பதால் தான்
பொருட்கள் உண்டு என்று நம்புகிறோம்,

ஆனால் புலன் உணர்ச்சி என்பது என்ன ? அவை நம் மனதில் எழும் எண்ணங்கள் தானே!
ஆகவே புலன்களின் வாயிலாக நாம் காணும் பொருள்கள் எல்லாம் நமது எண்ணங்கள்
தவிர வேறு அல்ல, மேலும் இந்த எண்ணங்கள் நமது மனதுக்கு வெளியே நிலைபெற்று
இருக்க முடியாது"

என சொல்லி முடிச்சுட்டார்

அதாவது ஒரு பொருள்னா அதை எப்படி நாம் உணர்கிறோம் புலன் உணர்ச்சிகள் மூலம்
புலன் உணர்ச்சிகள் எண்ணங்கள் தானே அப்போ பொருள் =எண்ணங்கள் என நேராக
ஒரே போடாக போட்டு விட்டார். எண்ணங்கள் என்பவை மனதுக்கு வெளியே இல்லை
எனவே பொருட்களும் மனதுக்கு வெளியே இல்லை.

சரிய வெளியே இல்லை அவை என்ன ? அதாவது பொருட்கள் என்ன ?
இந்த கேள்வி வருதுல்ல ?

அதற்க்கு பதில் :
பொருள்கள் இல்லை எல்லாம் மாயை என மறுக்கவில்லை
அவர் பொருட்கள் இருக்கின்றன ஆனால் அவை எல்லாம் புலனுணர்ச்சியின்
வடிவத்திலேயே உள்ளன. இந்த புலன் உணர்ச்சிகள்தான் அவற்றை நாம்
அறியும்படி செய்கின்றன. அதிலிருந்து அவர் வரும் முடிவு இதான்
பொருட்களும் அவற்றை பற்றிய நமது புலனுணர்ச்சியும் ஒன்றுதான் என்பதுதான்.
அதாவது பொருள் =புலனுணர்ச்சி

இப்படி சொல்லிட்டா விட்டுட முடியுமா ? எப்படியய்யா இதை சொல்றீங்கன்னு
கேட்பம்ல

அதற்கு பதில் :

நாம் கண்ணால் ஒரு பொருளை பார்கிறோம் ,தொடுதலின் மூலமாக ஒரு அதன்
திடநிலையை அறிகிறோம் ,முகர்ந்து பார்த்து அதன் வாசனையை அறிகிறோம்
இப்படியே நமது எல்லா உறுப்புகளின் வாயிலாகவும் அதன் பல்வேறு தன்மைகளை
உணர்கிறோம். வெவ்வேறு புலன் உணர்ச்சிகள் வெவ்வேறு எண்ணங்களை
தறுகின்றன அதன் கூட்டு சேர்த்து அவற்றிற்கு பொதுப்பெயர் கொடுத்து
அவற்றை பொருளாக கருதும் படி செய்கிறோம்.

"உதாரணமாக ,ஒரு குறிப்பிட்ட நிறமும் சுவையும் மனமும் வடிவமும் திரட்சியும்
ஒன்றாய் கூடியிருப்பதைக் கண்ட பிறகு அவற்றையெல்லாம் கொண்டு ஒரு குறிப்பிட்ட
பொருளை குறிப்பதாக கொள்கிறோம். அதை ஆப்பிள் பழம் என்கிறோம்
இவ்வாறே வெவ்வேறு எண்ணங்களை சேர்த்து மரமாகவும் கல்லாகவும்
ஆகின்றன." என்கிறார் பெர்க்கிலி.

ஆகவே பிரபஞ்சமும் அதில் உள்ள பொருட்களும் மனதுக்கு வெளியே
இருப்பதாக நினைப்போமானால் நாம் மனமயக்கத்துக்கு ஆளாகுவோம்
என்கிறார் .

பொருட்களின் குணாம்சங்கள் தனித்துவமானது என்பதையும்
களைய முயல்கிறார் பெர்க்கிலி

ஒவ்வொரு பொருளுக்கும் இன்ன நிறம், இன்ன சுவை, இன்னமணம்
இன்ன எடை என்று இருப்பதால் தானே பொருட்கள் இருக்கிறது
என்கிறீர்கள் அந்த குணாம்சங்கள் அந்த பொருட்களிடம் கிடையாது,
நம் மனதில்தான் இருக்கிறது என்று நிரூபிக்கிறேன் , இதோ

ஒரு துணி , இதுசிகப்பு என்று நீ சொல்கிறாய் உண்மையில் இது
சிகப்புதானா? அந்த சிகப்பு துணியில் அடங்கி இருப்பதாக நீ நினைக்கிறாய்
நிச்சயமாய் அப்படித்தானா? மனிதனின் கண்கள் போலில்லாமல் வேறு மாதிரி
கண்கள் உடைய மிருகங்கள் இருப்பதை நீ அறிவாய் அவை அந்த பொருளை
சிகப்பு நிறத்தில் பார்க்காது அதேபோல் மஞ்சள் காமாலை உள்ளவனுக்கு
அந்த துணி மஞ்சளாக இருக்கும் அதுக்கென்ன சொல்கிறாய் ? அதன்
நிஜமான நிறம்தான் எது? நிலமைகளை பொருத்தது என சொல்கிறாயா
அப்படியானால் சிகப்பு என்பது அந்த பொருளில் இல்லை நமது மனதில்தான்
உள்ளது.

பிறகு இன்னொரு உதாரணம் கொடுத்தார் . இந்த துணி லேசாக இருக்கிறது
என்கிறாயா ? சரி இந்தத் துணி ஒரு எறும்பின் மீது விழுந்தால்,நிச்சயமாக
எறும்புக்கு அது கனமாகப்படும். இதில் யார் சொல்வது சரி? சரி அந்த துணி
சுடுகிறதாக நீ நினைக்கிறாயா? நீ காய்ச்சலில் படுத்திருந்தால் அப்போது
அது உனக்கு சில்லென்று இருப்பதாக தோன்றும். ஆக நாம் பல மாயைகளுகு
ஆளாகிறோம் என்பதுதான் விசயம், பொருட்கள் என்பவை நமது மனதிலேயே
இருக்கின்றன என்கிறேன்"

பொருட்களிடமிருக்கும் அவற்றின் எல்லா குணாம்சங்களையும் நீக்குவதன்
மூலம் அவற்றிற்கு தனிபட்ட இருத்தல் என்பதை மெய்பிக்க முயல்கிறார்
பெரிக்கிலி. அதன் மூலம் பொருள் என்பதே ஒரு கருத்துதான் என முடிவுற்று வருகிறோம்.

சரி எல்லாம் நம் மனதின் உள்ளேதான் இருக்கின்றன என்பது உண்மையானால்
புற உலகு என்பதே கிடையாது என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும்

இந்த வாதத்தின் முடிவு வரைக்கும் போனால் என்னாகும்

இந்த உலகத்தில் நான் ஒருவந்தான் இருக்கிறேன் என்ற முடிவுதான் வரும்

"நான் ஒருவந்தான் இருக்கிறேன் மற்றவர்கள் எல்லோரும் இல்லை.
ஏனென்றால் என்னுடைய எண்ணெங்களைக் கொண்டுதானே நான் மற்ற
மனிதர்களை அறிகிறேன் ; பிற பொருட்களை போலவே, மற்ற மனிதர்களும்
எனக்கு எண்ணக்குவியல்களே" என்று கூறவேண்டிய நிலமைக்கு வந்து விடுகிறோம்.

பொருள் ஒன்று இல்லை எனும் வாதம் தர்க்க ரீதியாகவும்
முரண்பாடு இல்லாமலும் இருக்கவேண்டுமானால் இந்த அதிதீவிர முடிவான
"நான் ஒருவனே இருக்கிறேன்" எனும் முட்டாள் தனமான
முடிவுக்கு வந்து விடுகிறது .

முடிவாக

தத்துவஞானத்தின் முடிவான பிரச்சனைக்கு கருத்துமுதல்வாதம் சொல்வது மூன்று
விசயங்கள்
1.ஆன்மாதான் உலகை சிருஸ்டிக்கிறது
2.நமது மனதுக்குவெளியே உலகம் என்று ஒன்றில்லை
3.நமது எண்ணெங்கள்தான் பொருட்களை சிருஸ்டிக்கின்றன

1.ஆன்மாதான் உலகை சிருஸ்டிக்கிறது

ஆன்மாதான் உலகை சிருஸ்டித்தது என்று எல்லா மதங்களும்
அடித்து பேசுகின்றன . இதை இரண்டு விதமா சொல்கிறார்கள்

ஒன்று: கடவுள்தான் உலகை படைத்தார் . அது நமக்கு வெளியே
அப்பால் உண்மையிலேயே இருக்கிறது .இது எல்லா மதங்களிலும்
காணப்படும் வாதம்

இரண்டு : ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற எண்ணங்களை
உருவாக்கியதன் மூலம் கடவுள் உலகம் என்ற மாயையை உருவாக்கினார்

(பொருள் கலப்பற்ற ஆன்மீக வாதம் ) என்று இது அழைக்கப்படுகிறது.
இதுதான் பெர்க்கிலி பாதிரியார் சொன்னது. ஆன்மா ஒன்றுதான்யாதர்த்ததில்
இருப்பது ஆன்மாவின் சிருஸ்டிதான் உலகம் என்கிறார்.

2.நமது மனதுக்குவெளியே உலகம் என்று ஒன்றில்லை

நமது மனதுக்கு வெளியே பொருட்கள் இல்லை என்பதை
பெர்க்கிலி நிரூபிக்க விரும்பினார். அதற்க்காகத்தான் அவர்
பொருட்களின் குணாம்சங்களை அந்தந்த பொருட்களுக்கு சொந்தமானவை
என நாம் சொல்வதை மறுத்தார்.

பொருட்களின் குணாம்சங்கள் நமது மனதுக்குள்தான் இருக்கின்றன
என்று அடித்து கூறினார்.மேசை நாற்க்காலி எல்லாம் நமது மனதுக்குள் தான்
இருக்கின்றன மனதுக்கு வெளியே இல்லை என்று கருத்து முதல் வாதிகள் சொல்வது.

3.நமது எண்ணெங்கள்தான் பொருட்களை சிருஸ்டிக்கின்றன
சிந்தனையின் பிரதிபலிப்புதான்பொருட்கள் என்றால் என்ன அர்த்தம்?
பொருட்கள் என்கிற மாயையை மனதுதான் சிருஸ்டிக்கிறது.
பொருள் என்கிற எண்ணம் நமது சிந்தனையில் உதிக்கும்படி செய்வது
மனதுதான்.

பொருட்களிலிருந்து புலன்களின் மூலமாக நாம் பெறும் புலனுணர்ச்சி
நமது மனத்திலிருந்து பிறக்கின்றனவே தவிர அந்த பொருட்களில்
இருந்து பிறப்பதில்லை. ஆகவே இந்த காரணங்களை உத்தேசித்து
இந்த உலகம் என்ற எதார்த்தமும் ,பொருட்களும் இருக்க காரணம்
மனதுதான்.

எனவே நம்மை சூழ்ந்திருக்கும் புற பொருட்கள் மனதுக்குள்ளேதான்
இருக்க முடியுமே தவிர அவற்றிற்கு வெளியே இல்லை: அவை
நமது சிந்தனையில் பிரதிபலிப்பாகத்தான் புறப்பொருள் இருக்கிறது.

ஆனால் நமது மனம் இந்த எண்ணங்களை தானாகா சிருஸ்டிக்க முடியாது
அப்படி சிருஸ்டிக்க முடிந்து இருந்தால் தன் விருப்பம்போல உலகை
மனம் உருவாக்கி இருக்கும் அல்லவா? அப்படி விரும்பியதெல்லாம்
மனம் சிருஸ்டிக்கவில்லை என்பதை காண்கிறொம் .

இந்த மனம் முதலியவற்றையெல்லாம் விட அதிகவல்லமை படைத்த
கடவுள் என்ற விசயத்தை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிறார்
பெர்க்கிலி.

"கடவுள்தான் மனதை சிருஸ்டிக்கிறார் அந்த மனதுக்குள்ளே நாம் சந்திக்கும்
இந்த உலகத்தை பற்றிய எண்ணெங்களை நம்மீது சுமத்தி வைக்கிறார்."
என்கிறார்

இதற்கு பொருள்முதல் வாதம் தரும் பதில் என்னவென்பதை இனிமேல்
பார்ப்போம்

1 comments:

said...

மொத்தமா பெர்க்கிலி சொல்வதும் புரியலை ஒன்னும் புரியலை என்பவர்களுக்கு

உதாரணமாக

உங்களுக்கு முன்னே ஒரு மேசை இருக்குன்னு
சொன்னீங்கன்னா

பெர்கிலி தத்துவத்தின் படி அப்படி ஒரு பொருள் இல்லை
நம்ம சங்கரர் 8 நூற்றாண்டில் சொன்ன மாயா வாதம் தான் இது .

மேசை என்பது நம் மனதில் உண்டாகும் எண்ணமே தவிர பொருள் அல்ல என்கிறார் .

சரி இதை எப்படி நிரூபிக்கிறார்னா

மேசை பக்கத்தில் பார்க்கையில் பெரிசாகவும்
தூரம் போக போக சின்னதாகவும் தெரியுது இல்லையா

இதை வச்சு மேசை என்ற புறப்பொருளே உண்மையில் இல்லை அது நமது எண்ணம்தான் என்கிறார் பெர்க்கிலி

இருப்பதெல்லாம் மனதுக்குள் தான் இருக்கு பிரபஞ்சம் உள்பட அவருக்கு

சரி மேசை மேசையா எப்படி தெரியுதுன்னா

இவ்வாறு ஒவ்வொன்றும் அதன் குணாம்சங்களோடு தெரிய காரணம் மனதுக்கு மேற்பட்ட சக்தி அதாவது
ஆன்மாதான் அதுதான் இந்த எண்ணெங்களை சுமத்தி
நம்மை பார்க்க வைக்குதுன்னு சொல்றார்

அதைத்தான் அவர் கடவுள் என்கிறார்

எனவே கடவுள்தான் உலகை படைச்சார் என்கிறார்

இதுதான் இதன் சுருக்கம்