மார்க்சிய அரிசுவடி-பகுதி 3

பிரச்சனையின் சாரம்

எந்த ஒரு விசயத்திலும் நாம் தீர்வு கண்டுபிடிக்க
அந்த பிரச்சனையின் சாரத்தை அறிந்து கொண்டால் போதும்.
வேதியலில் அனுக்கள் நகர்வது விலகுவதும் எப்படி அதன் இயைபை பாதிக்குது என்பதை அறிய போதுமானதாகும் எனவே சாரமான விசயத்தை கற்றுகொண்டால் பிரச்சனையின் முழு தீர்வை அல்லாது அதன் சாரத்தை அறிந்தவர்கள் ஆவோம் .

எனவே உலகில் இதுவரை தோன்றிய தத்துவங்களின் பிரச்சனையே உணர்வுக்கும் பொருளுக்கும்உள்ள வேற்றுமையை விளக்குவதில்தான் இருந்தன என்றும் அதன் சாரம் இவ்வளவுதான் என்றும் நாம் உணர்ந்துகொள்ளும் போது இன்னும் முழுமை அடையாத ஆனால் சரியான திசைவழி செல்லும் தத்துவத்தை கையால் பற்றியவர்கள் ஆவோம்.

பிரபஞ்சத்தை படைத்தது சிந்தனையா:

ஒளியானது ஒரு வருடத்தில் ஒன்பது லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்வல்லது . இந்த தூரத்தை நாம் ஒரு ஒளியாண்டு எனலாம் சூரியன் மற்றும் கோல்களை ஒரு பகுதியாக கொண்ட பால்வெளியின் குறுக்களவு ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும் .

இந்த பால்வெளி மண்டலத்தை கொண்டுள்ள நாம் இருக்கும் பிரபஞ்சமானது மிக அரிதான் தொலை நோக்கிகள் கொண்டும் மிக நுட்பமான
கண்கியலின் அடிப்படையில் 2600 கோடு ஒளிஆண்டுகள் விட்டம் உடையது என அறிவியல் கூறுகிறது

இதில் சுய உணர்வும் , செயல் பாடும் கொண்ட பகுதி (space ) மிக குறுகியதாக வரையறுக்கப்பட்டுள்ளது அதில் உயிர் வாழும் ஜீவன்களின்
வாழ்வுகாலம் மிக குறைவாக வரையறுக்கப்பட்டுள்ளது
என எங்கெல்ஸ் கூறுவது சரியாகவே உள்ளது.

நீளத்திலும் அகலத்திலும் எல்லையற்றதாக விளங்கும் நேரமும் (time) இடமும்(apace) சிந்தனையால் படைக்கப்பட்டது எனும் கொள்கை மிகவும் தவறானது அல்லவா?

அகநிலை கருத்து முதல் வாதியான
பெர்க்லி (G.berkeley(1685-1753) கீழ்கண்ட வாறு சொல்கிறார்.

அகநிலை கருத்து முதல் வாதமும் பொருள்முதல் வாதமும்:

உலகத்தின் வலிமை மிக்க கட்டமைப்பில் அமையும் எல்லா பொருட்களும் மனதில் அன்றி வெளியே வாழமுடியாது (1)*

பெர்க்லியின் போதனைகளை நாம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்
1.நமது உணர்வுக்கு வெளியே ஒன்றும் இல்லை
2.ஏதாவது ஒன்று இருக்கிறது என்றால் நமது உணர்வுக்கு எட்டுகிறது என்று அர்த்தம் நமது உணர்வுக்கு எட்டவில்லை என்றால் அப்படி ஒரு பொருள் இல்லவே இல்லை என்று அர்த்தம்.

இதற்கு பொருள் முதல் வாதிகளின் பதில் என்ன நமது உணர்வுக்கு வெளியே எதுவுமில்லைன்னு சொன்ன பெர்க்லி எத்தனை முரண்பாடுகளை கொண்டு இருந்தார் அவருடைய வாதத்தில் என நாளை பார்ப்போம்
இன்னும் யாராலும் அசைக்கமுடியாததாக இருக்கும் மார்க்சியத்தில் அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடுவோம் :)

பெர்க்கிலி சொல்வதை பாருங்கள் படம் போட்டு இருக்கேன்
குறிப்பு :
*(1) the works of george Berkeley edited by george samson Vol 1 London P.181)

3 comments:

said...

மார்க்சியம் பற்றிய தங்களின் இந்த தொடரை வரவேற்கிறேன். ஏற்கனவே தாங்கள் எழுதிய ‘மார்க்சியம் ஆனா ஆவன்னா’ நான் பல முறை படித்து இருக்கிறேன். சிறிது இடைவெளிக்கு பிறகு திரும்பவும் படிக்கும் போது மார்க்சியத்தில் மேலம் தெளிவு பெறுவதாகவே உணர்கிறேன். இந்த தொடரின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

தாங்கள் தமிழில் மொழி பெயர்த்த, மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ படிக்க வேண்டும் என ஆர்வமாய் உள்ளேன். விரைவில் இதனை தொடர்வேன்.

தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் !

said...

அன்புள்ள நண்பர் மூர்த்திக்கு ,

நீங்கள் "கம்பிக்குள் வெளிச்சங்கள் எழுதிய" தோழர் தியாகுவென்று என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள் .

என் பெயரும் தியாகுதான் அவருக்கும் எனக்கும் பெயரும் மார்க்சிய பிடிப்பும்தான் ஒரே ஒற்றுமை.

மற்றபடி மார்க்சியத்தை தொடர்ந்து எழுத முயலுகிறேன் .

தோழமையுடன்
தியாகு

said...

//ஒன்பது லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்வல்லது . //

ஒன்பது லட்சத்து 44 ஆயிரம் கோடி கிலோமீட்டர்கள் என்று இருக்கவேண்டும்.