சோசலிசம் பற்றி

இது ஒரு நண்பரின் கட்டுரை

அவருக்கு நன்றி

மார்ஸிய அடிப்படைகள் பற்றி இன்னும் எழுத ஆரம்பிக்க வில்லை

வர்க்கச் சுரண்டலையும் ஏற்றத் தாழ்வுகளையும் பாலின ஒடுக்குமுறையையும் முடிவுக்குக் கொண்டுவந்து மானுட சுதந்திரத்தை உறுதிப்படுத்தி அதை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழிமுறையே சோசலிசம். குடிமை உரிமைகளுக்கு (இண்ஸ்ண்ப் ழ்ண்ஞ்ட்ற்ள்) சட்டவகைப்பட்ட உத்திரவாதங்கள்; முறையாகவும் அரசிடமிருந்து சுயேச்சையாகவும் சுயாதீனமாகவும் நிலவும் பொது மக்கள் கருத்து; மூடிய கதவுகளுக்குப் பின்னாலன்றி வெளிப்படையாக நடத்தப்படும் அரசியல்; ஒரு சுதந்திரமான பத்திரிகை உலகம்; பல்வேறு கருத்துகளுக்கு இடம் கொடுக்கக் கூடிய ஓர் அரசியல் கட்டமைப்பு ஆகியனதான் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலுமுள்ள அற்பத்தனமான அல்லது அப்பட்டமான சர்வாதிகாரங்களுக்கு முடிவு கட்டும்; திரை மறைவு சூழ்ச்சிகளிலிருந்தும் சொல்ஜாலப் புரட்டுகளிலிருந்தும் பொதுமக்களைக் காப்பாற்றும். அதாவது, பொதுவாகச் சொல்லப்போனால் நீதிக்கான தேடலையும் மானுடவாழ்வின் உண்மையான இலக்குகளுக்கும் இலட்சியங்களுக்குமான தேடலையும் அரசியல் செயல்பாட்டின் முதன்மையான குறிக் கோளாக ஆக்க வேண்டும். ஒப்பீட்டு நோக்கில் முன்னைக் காட்டிலும் கூடுதலான பொருளாதார வளர்ச்சியை, பொருளாதாரச் செழிப்பை, பொருள்களின் பகிர்வில் ஓர் அதிகரிப்பைச் சோசலிசம் இல்லாமலேயே சாதிக்க முடியும். தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் இதைத்தான் செய்துள்ளன. ஆனால் மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகள் வெறும் பொருள்களுக்கிடையே உள்ள உறவுகளாக, அவர்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ளும் உறவுகளாக இருப்பதை மாற்றியமைத்து அவற்றை மானுடத்தன்மையாக்குவதே சோசலிசம்.

மரக் கலப்பைகளின் நாடாக இருந்த ரஷ்யாவை இயந்திர உழுவைகளின் நாடாக மாற்றிய ஸ்டாலினின் சாதனைகள், "சோசலிசம்' என்பதற்கு நான் கொள்ளும் அர்த்தம் கொண்ட ஒரு விஷயத்தை ஒரு போதும் எட்டிப்பிடிக்கவில்லை. அதற்கு ஸ்டாலின் என்ற தனிநபர் மட்டும் காரணமல்ல; உள்நாட்டு, உலக நிலைமைகளும் காரணம். எப்படியிருப்பினும் சோசலிசத்திற்கான மறுமுயற்சிகள் உலகில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டன, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (கார்ல்) மார்க்ஸ் கூறினார்:

". . . பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் தொடர்ச்சியாகத் தங்களைத் தாமே விமர்சித்துக் கொள்கின்றன; தங்களுடைய வழிப்பயணத்தை அடிக்கடி நிறுத்திக்கொள்கின்றன; பார்வைக்குச் சாதிக்கப்பட்டது மாதிரித் தோன்றும் கட்டத்துக்கே மறுபடியும் வந்து, முதலிலிருந்து மறுபடியும் தொடங்குகின்றன. தங்களுடைய முதல் முயற்சிகளின் பலவீனங்களையும் குறைபாடுகளையும் அற்பத்தனங்களையும் ஈவிரக்கமின்றிக் கண்டனம் செய்கின்றன. தங்கள் எதிரியைப் பூமியிலே தூக்கியெறியும்பொழுதுகூட அவன் பூமியிலிருந்து புதிய பலத்தைப் பெற்றுக்கொண்டு முன்னைக் காட்டிலும் பலவானாகத் தங்களுக்கு முன்னால் வரவேண்டும் என்று ஆசைப்படுவதுபோலத் தோன்றுகிறது (லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்)

இது 19ஆம் நூற்றாண்டுப் புரட்சிகளுக்கு மட்டுமல்ல, 20, 21ஆம் நூற்றாண்டுப் புரட்சிகளுக்கும் பொருந்தும். ஸ்டாலினிசத்தோடு சோசலிசம் முற்றுப்பெற்றுவிட்டது அல்லது அழிக்கப்பட்டுவிட்டது என்ற வரலாற்றுத் தன்மையற்ற, கருத்து முதல்வாத, இயக்க மறுப்பியல் முடிவுகளுக்கு எதிரான கருத்தாகும்.

3 comments:

Anonymous said...

முதலில் எம் மக்களுக்கு உடுக்க நல்ல கோமணங்களா செய்து கொடுங்கய்யா.

said...

அனானி இதை சொல்ல ஏன் வெக்கப்படனும் மார்க்சிய கல்வி பயிலுவதில் உங்களுக்கு ஆர்வமில்லாமல் இருந்தால் நல்லது !

மக்களுக்கு நீங்கள் கோமணம் கொடுங்கள் நாங்கள் தத்துவ சிந்தனை கொடுக்கிறோம் .

மக்களே அவர்களுக்கான கோமணத்தை தயாரித்துகொள்வார்கள் .

said...

//". . . பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் தொடர்ச்சியாகத் தங்களைத் தாமே விமர்சித்துக் கொள்கின்றன; தங்களுடைய வழிப்பயணத்தை அடிக்கடி நிறுத்திக்கொள்கின்றன; பார்வைக்குச் சாதிக்கப்பட்டது மாதிரித் தோன்றும் கட்டத்துக்கே மறுபடியும் வந்து, முதலிலிருந்து மறுபடியும் தொடங்குகின்றன. தங்களுடைய முதல் முயற்சிகளின் பலவீனங்களையும் குறைபாடுகளையும் அற்பத்தனங்களையும் ஈவிரக்கமின்றிக் கண்டனம் செய்கின்றன. தங்கள் எதிரியைப் பூமியிலே தூக்கியெறியும்பொழுதுகூட அவன் பூமியிலிருந்து புதிய பலத்தைப் பெற்றுக்கொண்டு முன்னைக் காட்டிலும் பலவானாகத் தங்களுக்கு முன்னால் வரவேண்டும் என்று ஆசைப்படுவதுபோலத் தோன்றுகிறது (லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்)//

நல்ல கட்டுரை. ஏதோ சோசலிச ரஸ்யா சாசுவதமாக நிலைபெற்றுவிடும் என்று கண்மூடித்தனமாக கம்யுனிஸ்டுகள் நம்பியது போலவும். அது வீழ்ந்து பட்டு ஏமாற்றியது என்றூம் புரளி பேசுப்வர்கள் மார்க்ஸின் தீர்க்கமான இந்த வரிகளையும், ஸ்டாலின், லெனின், மாவோ வின் முதலாளித்துவ மீட்சி அபாயம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளையும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து மறைத்து பேசுகிறார்கள்.

அலை வடிவிலானதாகவே சமூக மாற்றம் இருக்கும்.

அசுரன்