மார்க்சிய அரிசுவடி

மார்க்சியத்தை பொருள் முதல் வாதம் கருத்துமுதல் வாதம் என இரண்டு மிக பெரிய தத்துவ நிலைபாடுகளின் அடிப்படையில் விளக்குவதுதான் சரி

என் வரையில் நான் ஒரு சில விளக்கங்களை கொடுத்து விடுகிறேன் கருத்துமுதல் வாதம் என்பது என்ன? இந்த உலகம் என்பது கருத்துக்களால் உருவாக்கப்பட்டது என சொல்லும் வகையினரே கருத்து முதல் வாதிகள் அதாவது சிந்தனை என்பது ஆதியில் இருந்தது அதுவே எல்லாவற்றையும் படைத்தது அந்த சிந்தனையை முழுமுதல் கருத்து என ஹெகல் விளக்கினார் நம்ம நாட்டில அதை பிரம்மம் கடவுள் சிவன் என சொன்னாங்க

இவர்கள் சொல்வது என்னவென்றால்ஒரு பொம்மை செய்யனும்னா அதை செய்யும் திட்டம் இருக்கனும் பிறகுதான் அது செய்யப்பட்டு இருக்கமுடியும் அதுபோல இந்த அகண்ட உலகம் ஒரு கருத்துல இருந்துதான் உதிச்சி இருக்கமுடியும் என சொல்கிறார்கள் .அதை சிலர் கடவுள் என்றும் சிலர் முழுமுதல் கருத்து என்றும் சொல்கிறார்கள் பொருள் முதல் வாதம் என்றால் என்ன ?பொருள் முதல் வாதம் என்பது உலகின் ஆதி முதலில் பொருள்தான் இருந்தது எனும் வாதம் கண்ணுக்கு தெரியும் புறப்பொருளை கன்ணுக்கு தெரியாத அகப்பொருள் படைத்தது எனும் கருத்தை நிராகரிக்கும் இவர்கள் மனித மூளை பிறந்த பிறகுதான் சிந்தனை வந்தது மனித மூளையோ சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் வந்து இருக்க முடியும் என சொல்கிறார்கள் .

அடுத்து கருத்து முதல் வாதம் யார் நலனில் அக்கரை கொண்டுள்ளது பொருள்முதல் வாதம் யார் நலனில் அக்கரை கொண்டுள்ளது அது ஏன் எப்படி வந்தது இந்த சார்பு நிலை என விளக்க முயலுகிறேன்

6 comments:

Anonymous said...

சரியா புரியலை. புரியும் படியாக விளக்கவும்

said...

மார்க்சியம் என்பது அவ்வப்போது தோழர்களால் பல விவாதங்களின் போது விளக்கப்பட்டு வந்து இருந்தாலும் மார்க்சியத்தை ஒருவர் கற்றுகொள்ள மிக பெரிய பிரயத்தனம் செய்ய வேண்டியதாகவே இருக்கிறது .

எனவே மார்சிய அடிப்படைகளை விளக்கவே இந்த பதிவு ஆரம்பிக்கப்பட்டது


மக்கு பயல் அவர்களே!

உங்கள் வருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி

அதாவது உலகை தத்துவத்தின் மூலம் மட்டுமே அதன் செய்லகளை புரிந்துகொள்ள முடியும்

அதற்காக ஏற்பட்ட தத்துவங்கள் எண்ணற்றவை
அவைகளை நமது வசதிக்காக

இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்

கருத்து முதல் வாதம்
பொருள் முதல் வாதம்

கருத்து முதல் வாதம் என்பது

நமது ஆன்மிக உணர்வுகள் அதாவது
சிந்தனை அறிவுதான் முதலில் தோன்றியது எனும் அடிப்படையில் விவாதிப்பது

பொருள்முதல் வாதம் என்பது

பொருளாதாய உலகு அல்லது இயற்கைதான் முதலில் தோன்றியது
என்பதை குறித்த விவாதம்

இதைத்தான் சொல்லி இருக்கேன்

said...

தொடருங்கள் அவ்வப்போது நானும் இணைந்து கொள்கிறேன். மார்கசிய அடிப்படைகளை இன்று வரும் தலைமுறையினருக்கு விளக்க வேண்டியது நம் கடமை.

said...

//மார்கசிய அடிப்படைகளை இன்று வரும் தலைமுறையினருக்கு விளக்க வேண்டியது நம் கடமை.
//

வாருங்கள் ஜாமலன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிறு சிறு பகுதிகளா தொடர்ந்து எழுதினால் இந்த பணி முடியும் என நினைத்து ஆரம்பித்து இருக்கேன் நன்றி

said...

ஏன் நாம் கருத்துமுதல்வாதம், பொருள் முதல்வாதம் போன்றவற்றை புரிந்து கொள்ள வேண்டும்?

மக்கள் பிரச்சினைகள் குறித்து நாம் விவாதிக்கும் பொழுதெல்லாம் அதற்க்கு பல்வேறு காரணங்களும், தீர்வுகளும் முன் வைக்கப்படுகின்றன. அந்த தீர்வுகள் காரணங்கள் எல்லாம் அவற்றுக்கு சொந்தக்காரர்களின் வர்க்க நலனை பிரதிபலித்தே வருகின்றன.

ஒரு எ-காவுக்கு; தொழிலாளி முன்னேறாமல் இருப்பதன் காரணம் அவனுக்கு திறமையில்லை என்று சொல்வது.

உண்மையில் அவனது திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்காத சமூகத்தை குற்றம் சொல்வதே நியாயம்.

இங்கு அவனது திறமையின்மையை குற்றம் சொல்வது கருத்து முதல்வாதம் ஏனேனில், அவனது திறமை என்னும் சிந்தனை சார்ந்த அம்சமே அவனது பொருளாதார நலனுக்கு ஊரு விளைவிக்கிறது என்று சொல்கிறது இந்த கருத்து.

மாறாக அவனது பொருளாதார நிலைமையே அவனது திறமை என்னும் சிந்தனை சம்பந்தப்பட்ட விசயத்தை தீர்மானிக்கிறது என்கிறோம் நாம், அதாவது பொருள்முதல்வாதிகள்.

இதே போல வர்ணாஸ்ரம தர்மமும் கருத்து முதல்வாதமே. அது என்ன சொல்கிறது ஒருவன் பிறக்கும் பொழுதே என்ன சிந்தனை தன்மையுடன் பிறக்கிறானோ அதற்க்கேற்ற பொருளாதார அடிப்படை அமைகிறது என்கீறான். இந்த கருத்து, கருத்து முதல்வாத அடிப்படையாக அமைகிறது. உண்மையில் ஒருவன் பிறக்கின்ற சமூக பொருளாதார சூழலே அவனது சிந்தனையின் தன்மையை தீர்மானிக்கீறது. இந்த பார்வை பொருள்முதல்வாதா பார்வையாகிறது.

தத்துவங்கள் குறித்த இந்த புரிதல் இல்லாவிடில் நடைமுறையில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை புரிந்து கொள்வதும் முடிவெடுப்பதும் கடினமாகிவிடுகிறது.

பொருள்முதல்வாதம் சிந்தனை அல்லது கருத்து என்பதின் பாத்திரத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா என்றால் ஏற்றுக் கொள்கீறது. இந்த அம்சத்தில் விரிவாக எழுதலாம். ஆயினும் தற்போது இது போதும் என்று கருதுகிறேன். ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய 'மார்க்ஸிய மெய்ஞானம்' புத்தகம் நல்ல அறிமுகத்தைத் தரும் இந்த அம்சத்தில்.

அசுரன்

said...

//தத்துவங்கள் குறித்த இந்த புரிதல் இல்லாவிடில் நடைமுறையில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை புரிந்து கொள்வதும் முடிவெடுப்பதும் கடினமாகிவிடுகிறது.
//

வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி தோழர் அசுரன்