"புலிகளை ஆதரிப்பவர் எல்லாம் இந்திய தேச
துரோகிகள் என்றார் ஜெயலலிதா?
நாம் இப்படி சொல்லலாம்
புலிகளை (அல்லது ஈழ தமிழரை ) ஆதரிப்பவர்கள்
எல்லாம் பார்பனிய தேச துரோகிகள் ?
ஆமாம் துரோகிகள் தாம் என சொல்லிக்கிறேன்
ஏனெனில்
புலிகளை ஆதரிப்பது இருக்கட்டும் ஈழ தமிழர்களை
காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கனும்
என்று காங்கிரசோ , அல்லது ஜெயலலிதாவோ
இதுவரை எதேனும் பேசி இருக்கிறார்களா என்றால்
இல்லை
கலைஞர் ஒரு கவிதை எழுதியதும்
அதை வைத்து அரசியல் பன்றாங்கன்னு பொதுவா
சொன்னாலும் இதன் உள்ளார்ந்த விசயம்
என்னவென்றால் ?
தமிழன் திராவிடன் என சொல்லப்படும்
இனத்தோடெல்லாம் ஜெயலலிதாவுக்கு ஒட்டும் இல்லை
உறவும் இல்லை என கோவிலில் ஆடுகெடாய்
வெட்டகூடாது எனும் அவரது சட்டத்தை வைத்தும் ,
மதமாற்ற தடை சட்டம் கொண்டுவந்ததை வைத்தும்
சொல்லிவிடலாம் செயலலிதா ஒரு பார்பனிய
திமிர் பிடிச்சவர் என்று .
சரி இந்திய தேசத்துரோகிக்கும் இதுக்கும் என்ன
சம்பந்தம்னு கேட்டீங்கன்னா
அந்த அம்மையார் சொல்வது பார்பனிய தேசியம்
அதாவது மொட்ட பார்ப்பானுகளும் ஆதிக்க சாதிகளும்
குஜராத்தில் இரத்த படுகொலை செய்தார்களே
அந்த பார்பனியம்
இந்த நாட்டில் உள்ள தீமைக்கெல்லாம் முஸ்லீம்கள்தான்
காரணம் என சொல்லி அந்த அப்பாவிகளை
கொல்கிறார்களே அந்த பார்ப்பனியம்
மணல் மேட்டை இராமர் பாளம் என சொல்லி
அரசியல் செய்து நக்கி பிழைக்கிறார்களே
அந்த பார்பனியம்தான்
அந்த பார்பனிய தேசியம்தான் ஜெயலலிதா சொல்லும்
பார்பனிய தேசியம்
இந்த பார்பனிய வெறித்தனம்தான் தெகல்கா டாட்காமால்
நிரூபிக்கப்பட்டுள்ளது ." என்று எழுதினேன்
உடனே ஓடி வந்தார் ஒருத்தர் .
ஏப்பா வேணும்னா ஜெயலலிதாவை திட்டு
ஏன் பார்பனர்களை மொத்தமா திட்டுகிறாய்
என்றார்
சரி ஏன் திட்டகூடாதுன்னு கேட்டது
பார்பான் என்றால் எல்லாரையும் சமமாக
பார்ப்பான் அவந்தான் பார்ப்பான் என்றார்
அதன் படி ஜெயலலிதா பாப்பாத்தி இல்லையாம்
ஜெயலலிதா நான் பாப்பாத்தின்னு சட்ட சபையிலெயே
சொல்லி இருக்காங்களே என்றேன் .
நான் அவரை பாப்பாத்தின்னு ஒத்துகளை என்றார்
நான் கேட்டேன் சரி அப்ப நீங்க சொல்லும் இலட்சணத்தோடு இருக்கும் பார்பான்கள்
சிதம்பரத்தில் தமிழில் பாட போராடும்
ஆறுமுக சாமிக்கு ஏன் உதவவில்லை என்றேன்
அது சட்ட பிரச்சனை
என்றார்
சரி பார்பனர்கள் பார்பன திமிர் உள்ளவரை
பார்பன திமிர் என்று சொல்வதால்
உங்களுக்கு என்ன பிரச்சனை என்றதும்
பொதுவா அப்படி சாதியை சொல்லி திட்டகூடாது
என்றாரே பார்க்கலாம்
அரண்டு போயிட்டேன்.
ஒரு பார்ப்பானே தன்னை பார்ப்பனன் என சொல்லிகொண்டு திமிரா பேசினாலும்
நாங்க அதை பார்ப்பன திமிர்னு சொல்வது தப்பாம்
பொது நீதி படி
சாதி இல்லையாம் சாதி ஒழிந்து விட்டதாம்
நான் கேட்கிறேன் இவரை
சாதிதான் ஒழிஞ்சுடுத்தே ஏன் பார்பன திமிர்னு சொன்னதும் உங்களுக்கு கோபம் வருது
நீங்க பார்பானா?
உடனே இதுக்கு மேல பேச வேணாம்
என பேச்சை நிறுத்தி விட்டாருங்க
தனது சாதியை சொல்லி திட்டும் போது மட்டும் கோபம் வரும் இந்த நபர்
தனது சாதியின் பேரை சொல்லி திமிர் பேசும் நபர்களை அந்த கூட்டத்தை ஏன் கண்டிபப்தில்லை
அவருக்கான கேள்விகள்
----------------------------------
1. இம்மாதிரி சாதி பெருமை பேசும் தன் சாதிமக்களை கண்டுக்காம இருப்பவன் என்னைய்யா பார்ப்பான்
2.உலகத்தை திருத்த முடியாதுன்னு மூடிட்டு இருப்பேல்ல
இப்ப மட்டும் ஏன் வாய திறக்கிற
3.எதிர்ப்பு குரலை அடக்க மட்டும் பொது நீதி சாதி இல்லைன்னு பேச வரும் குடுமிகள் அராஜக குரலையும்
தட்டி கேட்கனும் என்று ஏன் தோன்றுவதில்லை
இந்திய தேசியமா பார்பனிய தேசியமா ஜெயலலிதா
Posted by
thiagu1973
at
4
comments
இது தாண்டா பல்டி!!
தெருவில் வாக்கிங் போய்க் கொண்டிருந்த சீத்தாராம் எச்சூரியையும் பிரகாஷ் காரத்தையும் வழியில் மடக்கிய சில குரங்குகள், இவர்களால் தமதுபிழைப்பே நாறிப்போய் விட்டது என்றும், இவர்களின் தொழில் ரகசியத்தை சொல்லிக் கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கின்றன...
குரங்கு ஒன்று : - அய்யா, சிறப்பன முறையில் பல்டியடிப்பது எப்படி? நீங்கெல்லாம் அடிக்கும் பல்டியை பார்த்தால் எங்களுக்கெல்லாம்மார்கெட்டே போயிடும் போலிருக்கே!! உங்கள் தொழில் ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்து காப்பாத்துங்கையா.
ப்ரகாஷ் காரத் :- அது ஒன்னும் அவ்வளவு கஷ்டமான காரியமில்லை. முதலில் இவன் பல்டியடிக்க மாட்டான் என்கிற மாதிரி ஒரு தோற்றத்தைஏற்படுத்தனும். நான் அடிக்கமாட்டேன் அடிக்க மாடேன்னு சொல்லிச் சொல்லி ஒரு பிலிம் போடனும்.. அப்புறம் எல்லோரும் வாயத் தொறந்துட்டுஏமாந்து இருக்கும் போது சட்டுன்னு அடிச்சிடனும்..
குரங்கு இரண்டு :- ஒன்னும் பிரியலீங்களே..!
சீதாராம் எச்சூரி :- அதாவதுப்பா... பல்டியடிக்கறதுக்கு முன்னே எல்லார் பார்வையையும் நம்ம பக்கம் கொண்டாந்துடனும். நெறைய சவடால் அடிக்கனும்.. பெரிய பெரிய மனுஷங்க பேரெல்லாம் சொல்லி உதார் உடனும் - இந்த கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இப்படியாப் பார்த்து சிலபெயர்களை தெரிச்சி வச்சிக்கனும்.. நாங்கெல்லாம் அவர்களோட சீடர்கள்னு சும்மாங்காட்டிக்கு பீலாவுடனும்.. எல்லோரும் நம்பிக்கிட்டு இருக்கும் போதா பார்த்துஒரு அடி! ஒவ்வொத்தனும் அப்பிடியே வாயடச்சிப் போறா மாதிரி செய்துப்பிடனும்.. ஆமா..!
குரங்கு ஒன்று :- சரியா வெளங்கலையே... எதுனா உதாரணத்தோட சொல்லுங்களேன்..
காரத் :- இப்ப பாருங்க.. அணு ஒப்பந்தத்துல மேற்கொண்டு மனசுக்குள்ளே சிந்திச்சாலே நாங்க ஆட்சிய கலைச்சுடுவோம்னு அப்படியே உதார் விட்டோ மா..எங்களை இன்னும் நல்லவன்ன்ன்னு நம்பிட்டு இருக்கற மக்களெல்லாம் நிம்மதியா ஒரு பெருமூச்சு வுட்டாங்களா... அந்தப் பெருமூச்சு தீர்றதுக்குள்ளேசர்வதேச அணு சக்திக் கழகத்துல பேச்சு நடத்த தடையில்லேன்னும் சொல்லி அடிச்சோம் பாரு ஒரு பல்டி! அப்படி இருக்கனும்..
குரங்குகள் ஒரே குரலில் :- இதென்ன சரியான பேச்சுமாத்தா இருக்கு! இந்தப் நாறப்பொழப்பெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.. நாங்க திரும்பகாட்டுக்கே போறம்...
அப்பால மேட்டரு இன்னான்னா.... சிபிஎம் மடத்தோட சாமியாருங்கெல்லாம் வயக்கம் போல நீள நீளமா பிலிம் ஓட்டினு இருந்தாங்களே அணு சக்திஒப்பந்தத்தப் பத்தி... அவங்களோட அமெரிக்க அய்யாமாருகல்லாம் கல்கத்தாவுல வச்சி நேர்ல பார்த்த பின்னே, வயக்கம் போலவே ஓடுன பிலிம் ரோலஅவங்களே அறுத்துப்பிட்டாங்க..
சம்பந்தப்பட்ட செய்திகளின் தொகுப்பு :-
1) http://in.news.yahoo.com/071113/211/6n74g.html"But on Tuesday, the party said it has allowed the government to discuss
the Indo-US nuclear with the International Atomic Energy Agency (IAEA), which
was a complete reversal of its stand that the deal must not be 'operationalised'
"
2) http://www.indiainfoline.com/news/innernews.asp?storyId=51412&lmn=1"As expected, the UPA-Left committee on the Indo-US
civilian nuclear agreement allowed the Government to kick off negotiations with
the International Atomic Energy Agency (IAEA) for India-specific safeguards
"
3) http://www.timesnow.tv/NewsDtls.aspx?NewsID=4317"It appears that the Communists have finally bowed
to the UPA on the Nuclear deal"
4) http://www.dnaindia.com/report.asp?newsid=1133294"clarified that their decision to allow the UPA
government to approach the IAEA for India-specific safeguard talks was only to
save Prime Minister Manmohan Singh from embarrassment before the international
community."
5) http://www.deccanherald.com/Content/Nov162007/national2007111636099.asp?section=updatenews"In a dramatic turnaround, the
Left parties on Friday allowed the Manmohan Singh government to initiate talks
with the IAEA on India-specific safeguards agreement for the operationalisation
of the Indo-US Nuclear deal."
என்னோட சொந்த சலிப்பு : ச்சே எல்லா பத்திரிக்கை லூசுகளும் இந்த நாதாரிகளை இன்னும் "கம்யூனிஸ்டுகள்" அப்படின்னு எழுதி நம்ப ரத்தக் கொதிப்ப ஏத்துறானுவப்பா!
Posted by
Kaargi Pages
at
6
comments
தேவரின் பெயரால் பிழைப்பு வாதம்
தேவர் பெயரும் ஓட்டு வங்கியும்
------------------------------------------
செய்தி :நன்றி சற்றுமுன்
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வரதராஜன் வெளியிட்ட கருத்து தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முத்துராமலிங்கத் தேவர் ஒரு ஜாதித் தலைவர் என்றும் அதனால் அவரது பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்கக் கூடாது என்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வரதராஜன் பேசியிருப்பது அறியாமையின் வெளிப்பாடா அல்லது அறிந்தே பேசினாரா எனத் தெரியவில்லை.
நாடு முழுவதும் போற்றப்படும் தலைவர்களை, மக்கள் அவர்களது பண்பாலும், பாராட்டத்தக்க செயலாலும் மட்டுமே நினைவு கூறுகின்றனர். அவர் எந்த ஜாதியில் பிறந்தார் என்பதைப் பார்ப்பதில்லை. முத்துராமலிங்கத் தேவர் தேசியம், தெய்வீகம் என்ற இரு அம்சங்களுக்காக வாழ்ந்தவர் என்பதற்காகவே போற்றப்பட வேண்டியவர் என்றார்.
விமர்சனம் : தியாகு
சிலைகள் வைப்பதும் அதை திறந்து வைக்க விழா எடுப்பதுமாக தலைவர்கள் நாட்டு உழைத்தவர்களின் மேல் ஆளும் திமுக அரசும் இதற்கு முன்பு ஆண்ட அரசுகளும் காட்டி வரும் அக்கரையை நன்றாக கூர்ந்து நோக்கினால் .
ஓட்டு கணக்குதான் பிரதானமாக தெரிகிறது.
மதுரையில் மருதுசகோதரர்கள் சிலையை திறந்து வைத்தது மருது சகோதரர்கள் ஏற்றி வைத்த அன்னிய ஆதிக்க உணர்வை மீண்டும் கிளர்ந்தெழ செய்யும் நோக்கமா? இல்லை முக்குலத்தோரில் ஒரு குலமான சேர்வை இனத்தவரின் ஓட்டு வங்கியை பிரிக்கும் நோக்கம் தானே தவிர தூய தேசிய நோக்கம் எல்லாம் இல்லை இதில்.
இந்நிலையில் தேவரின் பெயரை சூட்டினார் தேவர் ஒரு சாதி தலைவர் என வரதராஜன் சொன்னதை கேள்வி கேட்கும் இல கணேசன்
தேவர் ஒரு தேசிய தெய்வீகத்தலைவர் என்கிறார்
இம்மானுவேல் கொலைவழக்கில் குற்றம் சாட்டபட்ட
ஒரு சாதி ஆதிக்க தலைவரை தேசிய மற்றும் தெய்வீக தலைவர் என இவர் எதற்காக சொல்கிறார் என்றால்
எந்த தேசியம் இவர்களுடையது ஆதிக்க சாதிகளின் தேசியம் இந்த தெய்வீகம் இவர்களது பார்பனிய தெய்வீகம் .
இந்தியாவில் பார்பனியத்தின் மீது தாக்குதல் விழுந்தால்
உடனே குரல் பஜகவிடம் இருந்து வருவது அதன் பார்பனிய ஆதரவு சிந்தாந்தம்
சாதி தலைவர் பெயரை வைப்பது
கலைஞரின் பிழைப்பு வாதம் நேராக
பார்பனியத்துக்கு வால்பிடிக்கிறது .
அதே நேரத்தில் வரதராஜன் பார்பனிய விரோதியா என்றால் அதை இன்னொரு நிகழ்வில் பேசலாம்
Posted by
thiagu1973
at
3
comments
மார்க்சிய அரிசுவடி-இதுவரை
நாம் பார்த்த விசயங்கள் என்னவென சுருக்கமாக
பார்ப்போம்
உலகில் தத்துவத்த்துறைதான் உலகை பற்றிய ஒரு புரிதலை தர முயற்சிக்கிறது .
தத்துவத்தில் உள்ளது இரண்டு பிரிவு
1. கருத்துமுதல் வாதம்
2.பொருள் முதல் வாதம்
இதில் கருத்து முதல் வாதத்தை எடுத்து கொண்டால்
அகவியல் கருத்துமுதல் வாதம் மற்றும் புறவியல் கருத்துமுதல் வாதம் என இருவகைப்படும்
அகவியல் கருத்துமுதல் வாதத்தில் பெர்க்கிலி
என்பவரின் கருத்துக்களை பார்த்தோம்
அவர் பொருள் = உணர்வு அப்படின்னார்
அதாவது நீங்களும் நீங்க கையில் கட்டி இருக்கிற
கடிகாரமும் ஒன்னுதான்னார்
இதுவரை பார்த்தோம்
இனிமேல் அகவியல் கருத்துமுதல் வாதத்தில் உள்ள கோளாறுகள் என்ன
அதை எப்படி உடைச்சாங்கன்னு பார்த்துட்டு
பிறகு மற்ற கருத்துமுதல் வாதிகள் என்ன சொன்னாங்கன்னு பார்ப்போம்
பொருள் என்றால் என்ன
பொருள்முதல் வாதம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்
பிறகு இயக்கவியல் முறை எனும் தத்துவ முறையை பார்ப்போம் .
அதுக்கு பிறகு இயக்கவியல் பொருள்முதல்வாதம்
அதற்கு பிறகு வரலாற்று பொருள்முதல்வாதம்
இப்படி ஒவ்வொண்ணா பார்க்கலாம்
Posted by
thiagu1973
at
0
comments
Labels: அர்சுவடி சுருக்கம்
மார்க்சிய அரிசுவடி-பகுதி 3
பிரச்சனையின் சாரம்
எந்த ஒரு விசயத்திலும் நாம் தீர்வு கண்டுபிடிக்க
அந்த பிரச்சனையின் சாரத்தை அறிந்து கொண்டால் போதும்.
வேதியலில் அனுக்கள் நகர்வது விலகுவதும் எப்படி அதன் இயைபை பாதிக்குது என்பதை அறிய போதுமானதாகும் எனவே சாரமான விசயத்தை கற்றுகொண்டால் பிரச்சனையின் முழு தீர்வை அல்லாது அதன் சாரத்தை அறிந்தவர்கள் ஆவோம் .
எனவே உலகில் இதுவரை தோன்றிய தத்துவங்களின் பிரச்சனையே உணர்வுக்கும் பொருளுக்கும்உள்ள வேற்றுமையை விளக்குவதில்தான் இருந்தன என்றும் அதன் சாரம் இவ்வளவுதான் என்றும் நாம் உணர்ந்துகொள்ளும் போது இன்னும் முழுமை அடையாத ஆனால் சரியான திசைவழி செல்லும் தத்துவத்தை கையால் பற்றியவர்கள் ஆவோம்.
பிரபஞ்சத்தை படைத்தது சிந்தனையா:
ஒளியானது ஒரு வருடத்தில் ஒன்பது லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்வல்லது . இந்த தூரத்தை நாம் ஒரு ஒளியாண்டு எனலாம் சூரியன் மற்றும் கோல்களை ஒரு பகுதியாக கொண்ட பால்வெளியின் குறுக்களவு ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும் .
இந்த பால்வெளி மண்டலத்தை கொண்டுள்ள நாம் இருக்கும் பிரபஞ்சமானது மிக அரிதான் தொலை நோக்கிகள் கொண்டும் மிக நுட்பமான
கண்கியலின் அடிப்படையில் 2600 கோடு ஒளிஆண்டுகள் விட்டம் உடையது என அறிவியல் கூறுகிறது
இதில் சுய உணர்வும் , செயல் பாடும் கொண்ட பகுதி (space ) மிக குறுகியதாக வரையறுக்கப்பட்டுள்ளது அதில் உயிர் வாழும் ஜீவன்களின்
வாழ்வுகாலம் மிக குறைவாக வரையறுக்கப்பட்டுள்ளது என எங்கெல்ஸ் கூறுவது சரியாகவே உள்ளது.
நீளத்திலும் அகலத்திலும் எல்லையற்றதாக விளங்கும் நேரமும் (time) இடமும்(apace) சிந்தனையால் படைக்கப்பட்டது எனும் கொள்கை மிகவும் தவறானது அல்லவா?
அகநிலை கருத்து முதல் வாதியான
பெர்க்லி (G.berkeley(1685-1753) கீழ்கண்ட வாறு சொல்கிறார்.
அகநிலை கருத்து முதல் வாதமும் பொருள்முதல் வாதமும்:
உலகத்தின் வலிமை மிக்க கட்டமைப்பில் அமையும் எல்லா பொருட்களும் மனதில் அன்றி வெளியே வாழமுடியாது (1)*
பெர்க்லியின் போதனைகளை நாம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்
1.நமது உணர்வுக்கு வெளியே ஒன்றும் இல்லை
2.ஏதாவது ஒன்று இருக்கிறது என்றால் நமது உணர்வுக்கு எட்டுகிறது என்று அர்த்தம் நமது உணர்வுக்கு எட்டவில்லை என்றால் அப்படி ஒரு பொருள் இல்லவே இல்லை என்று அர்த்தம்.
இதற்கு பொருள் முதல் வாதிகளின் பதில் என்ன நமது உணர்வுக்கு வெளியே எதுவுமில்லைன்னு சொன்ன பெர்க்லி எத்தனை முரண்பாடுகளை கொண்டு இருந்தார் அவருடைய வாதத்தில் என நாளை பார்ப்போம்
இன்னும் யாராலும் அசைக்கமுடியாததாக இருக்கும் மார்க்சியத்தில் அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடுவோம் :)
பெர்க்கிலி சொல்வதை பாருங்கள் படம் போட்டு இருக்கேன்
குறிப்பு :
*(1) the works of george Berkeley edited by george samson Vol 1 London P.181)
Posted by
thiagu1973
at
3
comments
Labels: மார்க்சிய அரிசுவடி
மார்க்சிய அரிசுவடி-பகுதி 2
தத்துவங்கள் என்பது ஒரு அறிதல் முறை
தத்துவங்கள் இல்லைன்னா நம்மால் ஒரு விசயத்தை
புரிந்துகொள்ள முடியாது .
தத்துவம் என்றால் என்ன ? அப்படின்னு கேட்டீங்கன்னா
தத்துவம் என்றால் உண்மை; உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள்.
(தத்துவத்தில் வறுமைன்னு மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதி இருக்கார் )
ஆகையால் தத்துவங்கள் தாம் உலகை பற்றி வியாக்கியானம் செய்ய ஆரம்பித்தன.
சரி கருத்து முதல் வாதத்துக்கு வருவோம் இன்னைக்கு இருக்கிற சாமி , பூதம் ,பேய் பில்லி சூனியம் முதல் உயர்ந்த ஆத்மா கோட்பாடு , ஒருமை கோட்பாடு (அத்வைதம் ) எல்லாத்தையும் கருத்து முதல் வாதத்தில் நாம் அடக்கிடலாம்
உலகை பற்றிய கருத்து சார்ந்த புரிதல்தான் மதம்னு சொல்லலாம் .
புறவுலகு என்பதே நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்குன்னு கருத்து முதல் வாதிகள் சொன்னார்கள்
பாம்பும் கயிறும் வேறுவேறாக தெரிவது நமது அகம் சார்ந்த விசயம் உண்மையில் அங்கே இருப்பது ஒன்றுதான் என்பன போன்ற கோட்பாடுகள் .
ஹெகல் சொன்னது முழுமுதல் கருத்து எனும் கோட்பாடு
உலகை பற்றியும் அதன் இருப்பு அதன் இயக்கம் பற்றியும் கருத்து முதல் வாதிகள் கருத்து ஒவ்வொன்றாக உடைய ஆரம்பித்தது எப்போன்னா
அறிவியல் வந்த பிறகுதான் .
எப்படி ஒன்னொன்னா கருத்து முதல் வாதிகளின் கருத்து உடைந்தது
Posted by
thiagu1973
at
0
comments
Labels: மார்க்சிய அரிசுவடி
மார்க்சிய அரிசுவடி
மார்க்சியத்தை பொருள் முதல் வாதம் கருத்துமுதல் வாதம் என இரண்டு மிக பெரிய தத்துவ நிலைபாடுகளின் அடிப்படையில் விளக்குவதுதான் சரி
என் வரையில் நான் ஒரு சில விளக்கங்களை கொடுத்து விடுகிறேன் கருத்துமுதல் வாதம் என்பது என்ன? இந்த உலகம் என்பது கருத்துக்களால் உருவாக்கப்பட்டது என சொல்லும் வகையினரே கருத்து முதல் வாதிகள் அதாவது சிந்தனை என்பது ஆதியில் இருந்தது அதுவே எல்லாவற்றையும் படைத்தது அந்த சிந்தனையை முழுமுதல் கருத்து என ஹெகல் விளக்கினார் நம்ம நாட்டில அதை பிரம்மம் கடவுள் சிவன் என சொன்னாங்க
இவர்கள் சொல்வது என்னவென்றால்ஒரு பொம்மை செய்யனும்னா அதை செய்யும் திட்டம் இருக்கனும் பிறகுதான் அது செய்யப்பட்டு இருக்கமுடியும் அதுபோல இந்த அகண்ட உலகம் ஒரு கருத்துல இருந்துதான் உதிச்சி இருக்கமுடியும் என சொல்கிறார்கள் .அதை சிலர் கடவுள் என்றும் சிலர் முழுமுதல் கருத்து என்றும் சொல்கிறார்கள் பொருள் முதல் வாதம் என்றால் என்ன ?பொருள் முதல் வாதம் என்பது உலகின் ஆதி முதலில் பொருள்தான் இருந்தது எனும் வாதம் கண்ணுக்கு தெரியும் புறப்பொருளை கன்ணுக்கு தெரியாத அகப்பொருள் படைத்தது எனும் கருத்தை நிராகரிக்கும் இவர்கள் மனித மூளை பிறந்த பிறகுதான் சிந்தனை வந்தது மனித மூளையோ சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் வந்து இருக்க முடியும் என சொல்கிறார்கள் .
அடுத்து கருத்து முதல் வாதம் யார் நலனில் அக்கரை கொண்டுள்ளது பொருள்முதல் வாதம் யார் நலனில் அக்கரை கொண்டுள்ளது அது ஏன் எப்படி வந்தது இந்த சார்பு நிலை என விளக்க முயலுகிறேன்
Posted by
thiagu1973
at
6
comments
Labels: மார்க்சிய அரிசுவடி