செருப்பால் அடித்து கருப்பட்டியை நக்கக் கொடுத்தாலும் வாங்கி வெட்கமில்லாமல் நக்கும் அளவுக்கு இந்துத்துவ வெறியர்கள் வெட்கமோமானமோ ரோஷமோ இல்லாதவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தான். அதிலும் அந்த வெல்லம் பதவி என்பதாக இருந்து விட்டாலோகேட்கவே வேண்டாம் அதில் பீயைத் தோய்த்துக் கொடுத்தால் கூட அதையும் சேர்த்தே நக்கத் தயாராக இருப்பார்கள் என்பது படு அப்பட்டமாக அம்பலமாகி இருக்கிறதுகருநாடகத்தில். இந்தப் போலி ஜனநாயகத்தின் மோசடிகளைப் பற்றி நாம் பலசந்தர்ப்பங்களில் பலவிதங்களில் எடுத்துச் சொல்லியிருந்தாலும்,ப்ராக்டிகல் எனப்படும் எதார்த்த அறிவை மக்களுக்கு ஊட்டியுள்ளதற்காக கருநாடக வோட்டுக்கட்சி அரசியல்வாதிகளை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
நல்லி எலும்பைக் கவ்வ அடித்துக் கொள்ளும் சொறி நாய்களைப் போல அதிகாரத்தைக் கவ்வ "மதச்சார்பற்ற" ஜனதா தளமும் பா.ஜ.கவும் கருநாடக மாநிலத்தில்அடித்த கூத்துகள் உலகப் பிரசித்தம்! இந்த ஜனநாயக நாடகத்தில் "தீடீர்" திருப்பமாக பா.ஜ.க பதவியேற்ற ஏழு நாட்களுக்குள் அதன் அரசாங்கத்தின் பீஸைப் பிடுங்கி விட்டுள்ளது கவுடா & சன்ஸ் கம்பெனி.. இதில் பேருக்கேற்றாற் போல் ஏதாவது "மதச்சார்பற்ற" காரணங்கள் இருக்கும் என்றுநீங்கள் நம்பினால் இன்னும் நீங்கள் இந்தியப் போலி ஜனநாயக மயக்கத்தில் இருப்பவர் என்று அர்த்தம்..
விஷயம் என்னவென்றால் இரண்டு கேப்மாரிகளில் எந்தக் கேப்மாரி பணம் கொழிக்கும் சுரங்கத்துறை, நிதித்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றைசூரையாடுவது என்பதில் தான் பிரச்சினையே. இதை தேங்காய் உடைப்பதைப் போல பட்டென்று சொல்லும் தைரியம் இருவருக்குமே இல்லை - இதில் மட்டும் தான் இருவருக்கும் கொளுகை ஒத்துமை! - தொலைக்காட்சி பேட்டிகளில் இரண்டு தரப்புமே மலவாயில் கட்டி வந்தவனைப் போலபலவாறு வளைந்து நெளிந்து நாட்டுமக்களுக்கு கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருந்தனர் நேற்று. இதில் உட்சபட்சமாக கவுடா & சன்ஸ் கம்பெனியைச்சேர்ந்த அடிமை ஒன்று "கருநாடகத்தை குஜராத் ஆவதில் இருந்து காப்பற்றவே நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றோம்" என்று ஒட்டுமொத்தமாகஇந்தப் பிரபஞ்சத்துக்கே பூச்சுற்ற முடியுமா என்று முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. உண்மையில் கடந்த இருபது சொச்ச மாதங்களில் கருநாடகத்தில் அதிகாரத்தை நன்றாகவே ருசி கண்டு விட்ட இந்துத்துவ கும்பல், அம்மாநிலத்தை தனது தென்னக குஜராத்தாக மாற்றியமைப்பதற்கானஅடிப்படை வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
பொதுவாகவே அடுத்தவனின் படுக்கையறை கழிப்பறை போன்றவற்றையெல்லாம் எட்டிப்பார்ப்பதில் விசேஷ ஆர்வம் காட்டும் ஊடகங்களுக்கு நேற்று பா.ஜ.க - கவுடா & சன்ஸ்கம்பெனி நடித்த போலி ஜனநாயக ஆபாசப்படமே பார்க்கக் கிடைத்தது காய்ந்த விட்டை தேடிப்போன பன்றி மலக்குட்டையில் தவறி விழுந்ததைப் போல் எதிர்பாராத ஜாக்பாட் ஆகிவிட்டது. நேற்று மாலை முழுவதும் காங்கிரஸ் பா.ஜ.க மற்றும் கவுடா & சன்ஸ் கம்பெனியைச் சேர்ந்த கோமாளிகள்எல்லா சேனல்களிலும் தோன்றி, தங்கள் அசிங்கமான அரசியல் மூஞ்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.. இதில் டைம்ஸ் நவ் ஆர்னாப் கோஸ்வாமிகேட்ட இரண்டு கேள்விகளுக்கு எடியூரப்பா அளித்த பதில்கள் இரண்டும் தான் எனக்குப் பிடித்த காமெடிக் காட்சியாக இருந்தது,
ஆர்ணாப் : - திரு எடியூரப்பா, நீங்கள் அமைத்த கூட்டனியானது எந்தக் கொள்கையின் அடிப்படையிலானது?
எடி : - கொள்கையெல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு இருபது மாதம் அவர்களும் இரண்டாவது இருபது மாதம் நாங்களும் முதலமைச்சராக இருப்பதுஎன்பது தான் ஏற்பாடு.. இப்போது அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள்.
ஆர்ணாப் : - உண்மையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?
எடி :- திரு கவுடா என்னைக் கொல்ல முயற்சிக்கிறார். என்னைக் கொல்ல பல கோயில்களுக்குச் சென்று முட்டை மேஜிக் செய்வதாக எனக்குநம்பகமான தகவல்கள் வந்துள்ளது. எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு கவுடா குடும்பம் தான் காரணம்..
அட.. உண்மையா இப்படித்தாங்க அந்தாள் சொன்னான். இவனெல்லாம் இந்த நூற்றாண்டுல வாழ்றானா இல்ல ஒரு பத்து பதினைந்து நூற்றாண்டுக்குமுன்னே வாழ்றானான்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.. ஆனால் பா.ஜா.க என்னும் நியாண்டிரதால் சமுதாயத்தின் திட்டத்தையே கொள்கையாககொண்ட கட்சியில், இன்றைய சமூகத்தை அப்படியே பின்னுக்கு இழுத்து மீண்டும் நியாண்டிரதால் சமூகத்தை உண்டாக்க வேண்டும் என்பதையேலட்சியமாகக் கொண்ட கட்சியில், இப்படி சின்னப்புள்ளத்தனமா "ப்ளாக் மேஜிக்" பற்றியெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு மூளை வளர்ந்தவர்கள் தான் இருக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
அந்த லூசு பேட்டில "ப்ளாக் மேஜிக்" என்று தான் குறிப்பிட்டது, அதற்கு எங்கள் ஊரில் முட்டை மேஜிக் என்று தான் சொல்வோம்.. எனவேபுரிதலுக்காக அதே பதத்தை பயன்படுத்தி உள்ளேன்.
மொத்தத்தில் கருநாடக அரசியல்வாதிகள் போலி ஜனநாயகத்தின் நீள அகலம் என்னவென்பதை நாட்டுக்கு உணர்த்தியுள்ளனர்.. தமிழகத்தில் அடுத்ததேர்தலை குறிவைத்து காமெடி வில்லன் ராமதாஸில் இருந்து சீரியஸ் காமெடியன் விஜயகாண்டு வரையில் பெட்டை நாயைத் துரத்தும் காம வெறி கொண்டகடுவன் நாய்களைப் போல உருமிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகமக்களுக்கு இந்த நாடகங்கள் பல படிப்பினைகளைச் சொல்கிறது!
மதியம் செவ்வாய், நவம்பர் 20, 2007
கருநாடக அரசியலில் முட்டை மேஜிக்!!!
Labels: போலி ஜனநாயகம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பயனுள்ள தகவல்கள் அடங்கிய நையாண்டி பதிவு தோழர்
அருமையான பதிவு...
சும்மா நச்சுன்னு இருக்கு ....
கர்நாடகத்தில் பாரதிய ஜனதா இத்தனை கீழ்த்தரமான முறையில் பதவிக்கு அலைந்தது கேவலமாக இருந்தது. நல்லவேளை தமிழ் நாட்டில் அவர்கள் இன்னும் முகவரியற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
கர்நாடகவில் நடந்த சீப் அரசியல்
பற்றிய பதிவுகள அருமையனவை.
Post a Comment