ஜி பெர்க்கிலி (1683-1753 ) இப்படி சொன்னார்
"உலகத்தின் வலிமைமிக்க கட்டமைப்பாய் இருக்கும் எல்லா பொருள்களும் மனிதில் அன்றி வெளியே வாழமுடியாது என்றார்"
அவரது உரைகள் இதான் 1. நமது உணர்வுக்கு வெளியே ஒன்றுமே இல்லை;
2.ஏதாவது ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது நமது புலனுணர்வுக்கு எட்டுகிறது
என்று பொருள் ; அவ்வாறு எட்டவில்லை என்றால் ,அப்படி ஒரு பொருள்
இல்லவே இல்லை என்று கொள்ளவேண்டும்
இந்த அறுதி உரை (அதென்னங்க அறுதி உரைன்னா இதாம்பா முடிவுன்னு சொல்வது )
ஆனால் பொருள்முதல் வாதம் என்ன சொல்லுதுன்னா
1.நமது புலனுணர்வுக்கு எட்டுகின்ற பொருட்கள் நம்மை சார்ந்திராமல்,
நமது உணர்வுக்கு வெளியே சுதந்திரமாக இருக்கின்றன;
2.நமது புலனுணர்வுக்கு எட்டுகின்ற பொருட்கள் , நமது புலன்களால்
அறியபடாவிடினும் கூட இருந்து வருகின்றன
பொருளை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் நமது புலனுணர்வே; எனவே"பொருள் என்பதும்
புலனுணர்வு என்பதும் ஒன்றுதான்" என்கிறார் பெர்க்லி.
இப்படி சொல்வது புலனுணர்வின் மூலமாக அறிதல் அன்றி நமக்கு பொருள்களை பற்றி
நமக்கு வேறு ஒன்றுமே தெரியாது என்ற கூற்றுக்குள் அடங்கிவிடுகிறது . ஒரு பண்டத்திற்கு
மதிப்பு (value) உண்டு என்று நமக்கு தெரியும், ஆனால் இதை எந்த ஒரு முறையாலும்
கண்ணால் காணவும் புலனால் உணரவும் முடியாது .
ஒளி ஒரு வினாடியில் மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது
என்று நமக்கு தெரியும் மனிதன் இத்தகைய வேகத்தை புலனால் உணரமுடியாது மனதால்
கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.
"மதிப்பு" என்பது கருத்துரு என சொல்கிறோம் அதாவது புலனுணர்வுகளால் உலகின் அனைத்தையும் உணர்ந்து விட முடியாது கருத்துருக்கள் வேணும் நாமே நடைமுறை வாழ்வில் கருத்துரு இல்லாமல் பேசிகொள்ள முடியாது "வட்டம் " என்பது ஒரு கருத்துருதான் இதைபற்றி நாம் தனி பகுதியாகவிரிவாக காணலாம் .கருத்துரு என்பது மனித அறிவின் முக்கியமான ஒரு பகுதி இந்த கருத்துருவை அப்படியே விட்டுவிட்டார் நம்ம பெர்க்கிலி (concept) கருத்துரு இல்லாமலேயே விரிகிறது அவரது போதனை கருத்துரு என்பதை மறுக்கும் விஞ்ஞானத்துக்கு பக்கம் கூட வரமுடியாதே புலனுணர்வில் இல்லாத ஒன்று உலகத்திலேயே இல்லை என்று
சொன்ன பெர்க்கிலி இப்படியும் சொன்னார்
" ஆனால் எனது புலன்களால் உண்மையில் அறியப்படும் கருத்துக்களோ எனது சித்தத்தை பொருத்தவை அல்ல (இந்த இடத்தில் கொஞ்சம் கவனிக்கவும் சித்தத்தை பொருத்தது இல்லை என்றால் சித்தத்தின் விருப்பத்தை பொறுத்தது இல்லை என கொள்ளலாம் ஏனென்றால் இதற்கு முன்பு அவர் புலனுணர்வுக்க்கு வெளியே எதுவும் இல்லை என சொல்லி இருக்கிறார்
இந்நிலையில் சித்தத்தை பொருத்தது இல்லை என சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தலாம் அதாவது புலனுணர்வுக்கு வெளியே பொருள் இல்லை ஆனால் புலன்களை நான் அறிவது எனது சித்தத்தின் விருப்பத்தை சாராமல் இருக்கிறது என்கிறார்)
முழுமையான பகல் வெளிச்சத்தில் நான் கண்களைத் திறக்கும் போது நான் கண்ணால் காண்பதும் காணாமல் இருப்பதும் எனது சித்தத்தை பொருத்தது அல்ல . அதே போல , என்னென்ன பொருட்கள் என் கண்களில் படவேண்டும் என்பதையும் நான் முடிவு செய்ய முடியாது. செவிப்புலனும் மற்ற புலன்களும் இதே போன்றதுதான். இப்புலன்களின் பதிய படுகின்ற
கருத்துக்கள் என் சித்தத்தால் படைக்கப்படுவன அல்ல" 1
பெர்க்கிலி சொல்வது உண்மைதாங்க நம்ம கண்ணுல என்ன விழனும் என்ன விழக்கூடாது என்பதை நாம் முடிவு செய்ய முடியாது .
அது சரிதானே லெனின் என்னா சொல்லி இருக்கார்னா
"நமக்கு வெளியே ,நம்மை சார்ந்து இராமல் நிகழ்கிறது பருபொருளின் இயக்கம் .உதாரணமாக , ஈதர் அலைகள் விழிதிரையின் மீது படும்போது, மனிதப் புலனில் குறிப்புட்ட நிறத்தை . இப்படித்தான் பார்க்கிறது இயற்கை விஞ்ஞானம்
இதுதான் பொருள்முதல் வாதம் :
நமது புலன்களின் மீது பருபொருள் செயல்படும்போது புலனுணர்வை ஏற்படுத்துகிறது" 2
இதிலிருந்து என்ன தெரியுது நமது புலன்களுக்கு வெளியே பருபொருள் நிலவுகிறது என்பதுதான்
மேலும் புறப்பொருள் நமது புலன்களின் மீது தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதும் தான்.
ஆதாரங்கள்:
1. The wors of George Berkely , Vol I P.191
2. வி. இ .லெனின் பொருள் முதல் வாதமும் அனுபவவாத விமர்சனமும்
(V.I lenin,collected Works, Vol. 14, p.55)
மதியம் வெள்ளி, நவம்பர் 23, 2007
மார்க்சிய அரிசுவடி -பகுதி4
Posted by
thiagu1973
at
12:19 PM
Labels: மார்க்சிய அரிசுவடி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அன்பு நண்பர்களே !
மிக தாமதமாக நான் அடுத்த பகுதியைஇட்டதற்கு மன்னிக்கவும் .
இனிமேல் முடிந்தவரை தொடர்ந்து கொடுக்க முயல்கிறேன்.
தோழர் தியாகு,
வாழ்த்துக்கள் தொடரந்து எழுதுங்கள்.
இன்னும் எளிய முறையில் எழுதுவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.
அசுரன்
தோழர் அசுரன்
பாராட்டுக்கு நன்றி மேலும் மேலுமமெளிமை படுத்த முயலுகிறேன்
ஆனால் புரியாத பகுதியை கேள்வியாக கேட்டால் விளக்குவேன்
அப்படித்தான் தெளிவு கிடைக்கும்
அதை நண்பர்கள் செய்வார்கள் என நம்புகிறேன்
Post a Comment