இயங்கியல்




















(மக்களுக்காக சிந்தித்த மாமேதை மார்க்ஸ்)

தத்துவம்:

இயற்கை ,மனித சமுதாயம் ,சிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சியின் மீது

ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த விஞ்ஞானமே தத்துவஞானமாகும்.

தத்துவஞானிகள் பொதுவாக உலகத்தை பத்தி வியாக்கியானம் செய்து உள்ளார்கள்

(உதாரணம் : சங்கரர்- அத்தவைதம் பிரம்மம் சத்யம் ஜகத் மித்யை அதாவது இருப்பது பிரம்மம் ஒன்றுதான் உலகம் இருப்பதாக சொல்வது மாயை என்பது.
ஜெ.கிருஸ்ணமூர்த்தி போன்றோர் பிரச்சனைகள மனிதனுக்குள் உள்ளன அவற்றை வெளியே தேட வேண்டாம் என்றார்கள்.ரமணர் உள்நோக்கிய நான் யார் எனும் கேள்விகளை கேட்பது அதன் மூலம் பிரச்சனைகள் தனக்கு அல்ல தனது உடலுக்கு என தெளிவது நான் அழிவற்ற ஆன்மா என உணர்வது .என்பன போன்ற ஏராளமான தத்துவங்களை காணலாம் )

ஆனால் விசயம் என்னவென்றால் மக்களின் பிரச்சனையை தீர்க்க இவற்றால் இயலாது என்பதை நாம் காணலாம் இந்நிலையில் அவை வெறும் ஏட்டு சுரக்காயாகவும் மிக சிறுபாண்மையாரோல் படிக்கப்படும் திண்ணை தத்துவங்களாக மாறிப்போய்விட்டன .

தத்துவ துறையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் அறிவியல் அனுகுமுறையே இயங்கியல் பொருள்முதல்வாதம் எனப்படுகிறது.

அதைப்பற்றி இங்கு காண்போம்

♣ மார்க்ஸ் எங்கெல்ஸ்க்கு முன்பு இயங்கியலும் பொருள்முதல் வாதமும் பல அறிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டன மனித சிந்தனையின் ,பகுத்தறிவின் ஆக உயர்ந்த வடிவமான இயங்கியல் பொருள்முதல்வாதம் இருக்கிறது .சாதாரண சிந்தனைக்கு சற்று கடினமாக தோன்றும் அதை புரிந்து நடைமுறைக்கு உபயோகிக்க தொடங்கி விட்டால் எத்தனையோ சிக்கல்களை அவிழ்க்க வழி பிறப்பதை காணலாம்.( மற்ற தத்துவங்களை அன்றாட பிரச்சனைக்கான தீர்வாகவோ அல்லது கருவி(tool )ஆகவோ உபயோகிக இயலாது என்பதை நீங்கள் இனிமேல் கான்பீர்கள் .

♣ எல்லாம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன எப்போதும் இயங்கி கொண்டே இருக்கின்றன . ஏதோ ஒன்று தோன்றிக்கொண்டேயும் எதோ ஒன்று மறைந்து கொண்டேயும் இருக்கின்றது .இந்த மாறுகின்ற போக்கு ஒன்றே நியாயமானது
(உதாரணங்கள்: வளர்ந்து கொண்டும் பட்டு போய் கொண்டும் இருக்கும் தாவரம் உள்ளிட்ட சகல உயிரினங்களும்
மாறுதல் : உலகம் மாயை என்ற கருத்தை இது நிராகரிப்பதோடு உலகம்
இயங்கிகொண்டுள்ள ஒரு நிஜ வஸ்து என ஒப்புகொள்கிறது)

♣ இயக்கம் படைக்கப்பெறாதது ; அழிக்கப்படாதது ; இயக்கமானது பருபொருளின் உள்ளிருக்கும் இயல்பாகும் அதன் இருத்தலின்
பாங்காகும் என்பது பொருள்முதல் வாதத்தின் கோட்பாடு கூறுகிறது.

♣ உலகம் என்பது பொருட்களின் சேர்க்கை அல்ல: நிகழ்ச்சி போக்குகள்,உறவுகள்,தோடர்புகள் ஆகியவற்ரின் சேர்க்கையே. எல்லா புலப்பாடுகளிலும் உள்ளார்ந்த முரண்பாடுகள் இருக்கின்றன.

♣ பொருள்வகை உலகுடம் உணர்வு கொண்டுள்ள உறவு பற்றிய பிரச்சனையே தத்துவஞானம் முழுமைக்கும் மாபெரும் அடிப்படை பிரச்சனையாகும். பொருள்வகை உணர்வு அல்லது இயற்கைதான் ஆன்மாவை தோற்றுவிக்கிறது என்கிறது பொருள்முதல்வாதம்.
(ஆனால் கருத்துமுதல்வாதிகள் முழுமுதல் கருத்துதான் (கடவுள்)தான் உலகை தோற்றுவிப்பதாக சொல்வதை மறுக்கிறது )

♣இயங்கியல் பொருள்முதல் வாதம் பற்றிய மார்க்ஸிய தத்துவத்திற்கு

இரண்டு சிறப்பியல்புகள் உள்ளது . ஒன்று அதன் வர்க்க இயல்பு;
(இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பது பாட்டாளிவர்கத்திற்கு சேவை செய்வது என்று அது வெளிப்படையாக பிரகடனம் செய்கிறது)

♣மற்றொன்று நடைமுறை படுத்துவதற்கான அதன் சாத்திய பாடு ( தத்துவம் நடைமுறை படுத்துவதில் தங்குவதை அது வலியுறுத்துகிறது
தத்துவம் நடைமுறையை ஆதாரமாக கொண்டது , மீண்டும் நடைமுறை படுத்துவதற்கே பயன்படுகிறது என்று அது வலியுறுத்துகிறது- மாவோ)

எனவேதான் மார்ஸிய தத்துவம் எப்போதும் புதுமையானதாகவும்
புரட்சிகரமானதாகவும் இருக்கிறது

ஏனெனில் நடைமுறை என்பது எப்போதும் நிகழ்காலத்தில் நடக்கும் போக்குதான்

அடுத்து இயங்கியலின் விதிகளை பார்போம் .....

5 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள்
தோழர்.

அப்புறம்,
நம்ம சந்திப்பு சார் வாழ்த்து
சொன்னது தான்
ரொம்ப அருவருப்பாக இருந்தது,
அந்த rss அரை டவுசர் அரவிந்தனை
பார்த்து ஒடி ஒளிந்து கொண்ட
அண்ணன் வாழ்த்து சொல்ல வர்றாரு,
வெட்கமாயில்லை.

சரி சரி டாடயிஸ்டுகளை
பற்றி,அதாவது அவர்களின்
தத்துவ திரிபை பற்றியும் எழுதுங்கள்
சரியாக போய் விடும்.

பாவெல்

said...

தோழர் தியாகு,

கட்டுரையை தமிழ்மணத்தில் இணைக்கும் முகமாக தமிழ்மண பட்டையை சொடுக்கவில்லை(click) என்றூ நினைக்கிறேன்.

அசுரன்

said...

அசுரன் ,

தமிழ் மணப்பட்டையை இணைக்கும்
முயர்சிகள் செய்து பார்த்தேன் அது முடியவில்லை அதான் இணைக்க இயலவில்லை

said...

உங்களது மார்க்சியம் குறித்த தளத்தைப்பார்வையிட்டேன்.

மார்க்சியம் தொடர்பான சொற்களுக்கும், ஏனையவற்றுக்கும் விளக்கமளிக்கும் கலைக்களஞ்சியக்கட்டுரைகளை உங்களால் ஆக்க முடியுமானால் அவற்றை விக்கிபீடியாவில் சேர்த்து வைக்கும்போது மிகுந்த பலனை தூர நோக்கில் அளிக்கும்.

உங்கள் வலைபப்திவிக்கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையைக் கொண்டிருக்கவில்லை. அவை கட்டுரைக்கான நடையைக் கொண்டிருக்கின்றன என்பதால் நேரடியாக அவற்றை விக்கிபீடியாவில் இணைக்க முடியாதுள்ளது.

தமிழ விக்கிபீடியாவில் பயனர் கணக்கொன்றினை உருவாக்கிக்கொண்டு பங்களிக்க வருமாறு வேண்டுகிறேன்.

எல்லாவிதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன்.

விக்கிபீடியா தொடர்பான அறிமுகத்திற்கு,

இக்கட்டுரையைப் பார்வையிடவும்

said...

அன்பின் மயூரன் ,
தங்களது வருகைக்கு நன்றி
தமிழ் வாசகர்களுக்கு மார்க்சியம் குறித்த
ஒரு விரிவான பார்வையை தர நினைத்துதான் இந்த பிளாக்கை தொடங்கி உள்ளேன் .
மற்றபடி கலைகளஞ்சியத்துக்கு சேர்க்கவும் எண்ணமுள்ளது .